நோக்கியா 8.1, நோக்கியா 7.1, நோக்கியா 6.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.!
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கபபட்டு தற்சமயம் ரூ.16,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த விலைகுறைப்பு சலுகை வரும் மே 18-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடல் நோக்கியா வெப் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு விரைவில் இந்நிறுவனம் புதிய நோக்கியா சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 8.1:
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.26,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.21,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.3000-வரை விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.26,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 7.1:
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கபபட்டு தற்சமயம் ரூ.16,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 8 சிராக்கோ மற்றும் நோக்கியா 6.1 பிளஸ்:
நோக்கியா 8 சிராக்கோ மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் முறையே விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.35,999 மற்றும் ரூ.14,4999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 4.2:
அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.500 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications