டிசம்பர் 21: இந்தியாவில் விற்பனைக்கு வரும் நோக்கியா 8.1: விலை எவ்வளவு தெரியுமா?
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனில் 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுகளும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
நேற்று எச்எம்டி குளோபல் நிறுவனம் மகிவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் டிசம்பர் 21-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் நோக்கியா ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

நோக்கியா 8.1:
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:7:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1080x2244 பிக்சல் திர்மானம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் சிறந்த பாதுகாப்ப அம்சத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 710:
இக்கருவி 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டூயல் ரியர் கேமரா:
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனில் 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுகளும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விலை:
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ரூ.26,999-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும், பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப்
பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் குறிப்பிட்ட தள்ளுபடி கிடைக்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications