நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு சலுகை.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, இந்நிலையில் நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 8110 4ஜி மாடல்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது இந்நிறுவனம்.

அதன்படி நோக்கியா 8.1 சாதனத்தின் முந்தைய விலை ரூ.19,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நோக்கியா 8110 4ஜி சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.2,999-விலையில் விறடபனை செய்யப்படுகிறது.
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080×2244 பிக்சல் திர்மானம் மற்றும் 18:7:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்புஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications