Home
Mobile

நோக்கியா-700, பிளாக்பெர்ரி-9790 ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு!

By Super
நோக்கியா-700, பிளாக்பெர்ரி-9790 ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு!

இதுவரை நிறைய ஸ்மார்ட்போன் ஒப்பீடுகள் பற்றி பார்த்திருந்தாலும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி ஒப்பீடு சற்று வித்தியாசமானது. மொபைல்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஆரம்பித்த காலத்திலேயே, தைரியமாக பல புதிய வகை மொபைல்களை வெளியிட்ட நிறுவனம் நோக்கியா.

அதிக விலை கொண்டதாக இருப்பினும், உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களாக இருந்தால் வாடிக்கையாளர்கள் நிச்சயம் வாங்க முன் வருவார்கள் என்பதை நிரூபித்த நிறுவனம் பிளாக்பெர்ரி.

இந்த இரண்டு நிறுவனங்களின் படைப்பான நோக்கியா-700, பிளாக்பெர்ரி-9790 என்ற இரு ஸ்மார்ட்போன்கல் பற்றி இங்கே ஓர் சிறிய

ஒப்பீடு.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இருவேறு இயங்குதளத்தில் இயங்குகின்றன. நோக்கியா-700 ஸ்மார்ட்போன் சிம்பையான் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம்11 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. பிளாக்பெர்ரி-9790 ஸ்மார்ட்போனில் உள்ள பிபி-7.0 இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1ஜிகாஹெர்ட்ஸ் மார்வல் டவோர் எம்ஜி-1 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

நோக்கியா-700 ஸ்மார்ட்போனில் 16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் 3.2 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அகன்ற திரையினால் 360 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற முடியும்.

பிளாக்பெர்ரி-9790 ஸ்மார்ட்போனில் டிஎப்டி தொழில் நுட்பம் கொண்ட 2.45 இஞ்ச் தொடுதிரை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 480 X 360 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன்களின் கேமரா வசதி இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரே மாதிரியான பிக்ஸலை கொண்டது.

நோக்கியா-700 ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ கேமராவினையும் கொண்டது. இந்த கேமராவினால் 720பி துல்லியத்தில் ஒரு நொடிக்கு 30 ஃபிரேம்களில் வீடியோ ரெக்கார்டிங்கை வழங்கும். பிளார்பெர்ரி-9790 ஸ்மார்ட்போனும் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ கேமராவினையும் கொண்டது.

நோக்கியா-700 ஸ்மார்ட்போனில் 2ஜிபி வரை இன்டர்னல் வசதியை பெற முடியும். இதன் மெமரி வசதியை 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ள முடியும். பிளாக்பெர்ரி-9790 ஸ்மார்ட்போன் 8ஜிபி வரை இன்டனல் வசதியை வழங்கும்.

இந்த ஸ்மார்ட்போனிலும் 32ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்தி கொள்ளும் வசதி இருக்கிறது. பிளாக்பெர்ரி-9790, நோக்கியா-700 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுமே எட்ஜ் மற்றும் ஜிபிஆர்எஸ் தொழில்

நுட்பத்தினை கொண்டது. இந்த ஸ்மார்ட்போன்களில் 2ஜி, 3ஜி நெட்வொர்க் வசதியையும் பெறலாம்.

நோக்கியா-700 ஸ்மார்ட்போனில் எல்ஐ-அயான் 1080 எம்ஏஎச் பேட்டரியும், பிளாக்பெர்ரி-9790 ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு 1,230 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைம் வசதியினையும் பெறலாம்.

நோக்கியா-700 ஸ்மார்ட்போன் ரூ.18,000 ஒட்டிய விலையிலும், பிளாக்பெர்ரி-9790 ஸ்மார்ட்போன் ரூ.26,000 ஒட்டிய விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X