நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

By Prakash
|

இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது. இப்போது நோக்கியா நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

நோக்கியா 7 இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, முதலில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் க்ளாஸ் பிளாக் மற்றும் மாட் ஒயிட் நிறங்களில் வெளிவந்தது. மேலும் இப்போது மாறுபட்ட மாட் ஒயிட் நிறங்களில் நோக்கியா 7 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது.

மாறுபட்ட மாட் ஒயிட் நோக்கியா 7 ஸ்மார்ட்போன் டிசம்பர் 12-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,482-எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

நோக்கியா 7 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

நோக்கியா 7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 7 White colour variant is now available for pre order ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X