பட்ஜெட் விலையில் வெளிவந்த நோக்கியா 7பிளஸ்: விமர்சனம்.!

நோக்கியா 7 பிளஸின் அளவுகளைப் பொறுத்த வரை, முறையே 158.4 x 75.6 x 8.0மிமீ அளவுகளைக் கொண்டுள்ளது.

|

6-இன்ச் முழு ஹெச்டி+ டிஸ்ப்ளே, 18:9 அம்ச விகிதம், ஆன்ட்ராய்டு ஓரியோ 8.1 மற்றும் பின்பக்க இரட்டை கேமரா செட்அப், ப்ளூடூத் 5 மற்றும் விரைவான சார்ஜிங் வசதியுடன் கூடிய 3800 எம்ஏஹெச் பேட்டரி ஆகிய அம்சங்களைக் காணும் போது, ஒரு உயர்தர ஸ்மார்ட்போன் என்று தோன்றுகிறதா? இல்லை, இது நோக்கியா 7 பிளஸின் சிறப்பம்சங்கள் ஆகும். ரூ.26 ஆயிரம் என்ற விலை நிர்ணயத்தில் அமைந்து, இடைப்பட்ட சந்தைக்கு மிகவும் தகுதி வாய்ந்த ஃபோனாக திகழ்கிறது. இந்த ஃபோனை குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.


நோக்கியா 7 பிளஸின் பிரேமிற்குள் அலுமினியம் பாடி உட்படுத்திய நிலையில் உள்ளது. மேலும் அதன் பக்கவாட்டு பகுதிகள், கேமரா மோடுல், டிஸ்ப்ளே மற்றும் கைரேகை சென்ஸர் ஆகிய இடங்களில் காப்பர் லைனிங் அளிக்கப்பட்டு, மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது. தற்போது உள்ள சில ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களைப் போல, நோக்கியாவும் இந்த ஃபோனிற்கு சதுரமான பக்கங்களை அளித்துள்ளது.

வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே

வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே

நோக்கியா 7 பிளஸின் அளவுகளைப் பொறுத்த வரை, முறையே 158.4 x 75.6 x 8.0மிமீ அளவுகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள பொத்தான்கள் மற்றும் போர்ட்கள் ஆகியவை சரியான இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் டைப்-சி யூஎஸ்பி போர்ட், ஸ்பீக்கர் மற்றும் முதன்மை மைக்ரோபோன் ஆகியவைக்கு தேவையான துளைகள் நேர்த்தியாக அமையவில்லை. ஒலி அளவை கூட்டும் மற்றும் பவர் பொத்தான் ஆகியவை வலது பக்கத்திலும் ஹைபிரிடு சிம் ட்ரே இடதுபக்கத்திலும் அமைந்திருந்து, 3.5மிமீ ஹெட்போன் உள்ளீடு வழக்கமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 கொரில்லா கிளாஸ் 3

கொரில்லா கிளாஸ் 3

நோக்கியா 7 பிளஸில் ஒரு 6-இன்ச் (2160 × 1080 பிக்ஸல்) முழு ஹெச்டி+ டிஸ்ப்ளேயை கொண்டு, 403 பிபிஐ அடர்த்தியை அளிக்கிறது. தற்போதைய வழக்கமாக இருக்கும் 18:9 விகித அளவில் அமைந்த டிஸ்ப்ளேயில், ஒரு 2.5டி வளைந்த கிளாஸ் அடுக்கையும் அதன் மேற்புறத்தில் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பையும் பெற்றுள்ளது. ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே-யை பெற்றிருப்பதால், மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது. தொடுதலுக்கான பதிலளிப்பு மிக வேகமாக உள்ளது. இதன் பாடிக்கும் திரைக்கும் இடையிலான விகிதம் ஏறக்குறைய 77% என்று நன்றாக உள்ளது.


ஒரு எல்சிடி டிஸ்ப்ளே-யைப் பெற்றிருந்தாலும், இந்தத் தரத்தில் அமைந்த பெரும்பாலான சாதனங்களோடு ஒப்பிட்டால், நோக்கியா 7 பிளஸ் சூரிய ஒளியில் காண்பதற்கு சிறப்பாக உள்ளது.

ஹார்ட்வேர்

ஹார்ட்வேர்

ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர்: செயல்பாடு
நோக்கியா 7 பிளஸ் ஃபோனுக்கு ஆற்றலை அளிக்கும் ஸ்னாப்டிராகன் 660, 2.2ஜிஹெச்இசட் மற்றும் 1.8ஜிஹெச்இசட் என்ற இரு அளவில் அமைந்த இரு குவாட் கோர்கள் உடன் இணைந்த ஒரு ஆக்டா கோர் எஸ்ஓசி ஆகும். இதன் சிப்செட், 14என்எம் மொபைல் பிளாட்ஃபாமை அடிப்படையாக கொண்டது. இந்த ஸ்னாப்டிராகன் 660 உடன் அட்ரினோ 512 ஜிபியூ காணப்படுவதால், சிறப்பான கேமிங் அனுபவத்தை பெற முடிகிறது. மேலும் 4ஜிபி எல்பிடிடிஆர்4 ரேம், 64ஜிபி (இஎம்எம்சி 5.1) உள்ளக நினைவகத்தைப் பெற்றுள்ளது. இதை ஒரு மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி ஆக உயர்த்த முடியும்.

ஸ்னாப்டிராகன் 660

ஸ்னாப்டிராகன் 660

ஸ்னாப்டிராகன் 660 மூலம் செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட புகைப்பட திறன் மற்றும் கேமிங், நீண்ட பேட்டரி திறன் மற்றும் வேகமான எல்டிஇ வேகம் போன்ற ஏராளமான அம்சங்களுக்கு ஆதரவாக இருப்பதோடு, 30% வரை கூடுதல் கிராஃபிக்ஸ் செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது. இதன் முன்னோடி உடன் ஒப்பிட்டால், எல்டிஇ மற்றும் வைஃபை டவுன்லிங் வேகம் இரட்டிப்பாக உள்ளது. மேலும் இந்த சிப்செட் மூலம் விரைவு சார்ஜிங் வசதியும் ஆதரிக்கப்படுகிறது.

மார்டன் காம்பேக்ட் மற்றும் டெட்டு ட்ரிக்கர் 2 போன்ற கேம்களை துவக்கும் போது, எந்தவிதமான தடங்கலும் தாமதமும் ஏற்படவில்லை. ஆனால் 30 நிமிடங்களுக்கு மேல் விளையாடிய போது, ஃபோன் சூடாக ஆரம்பித்ததோடு, சற்று தாமதமாக செயல்பட ஆரம்பித்தது.

கேமரா

கேமரா

நோக்கியா 7 பிளஸில் இரண்டு 12எம்பி சென்ஸர்களுடன் கூடிய ஒரு இரட்டை கேமரா செட்அப் காணப்படுகிறது. செல்பீ எடுக்க, ஒரு 16எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்க கேமராக்கள் உடன் இரட்டை டோன் எல்இடி பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கேமராவால் 4கே வீடியோக்களை எடுக்க முடியும் என்பதோடு, முன்பக்க கேமரா மூலம் முழு ஹெச்டி பதிவுகளைச் செய்ய முடியும்.

இந்த ஃபோனில் உள்ள கேமரா அப்ளிகேஷன் எளிமையான நடைமுறையைக் கொண்டிருந்தாலும், அது முற்றிலும் பழமையானது என்று கூற முடியாது. ஏனெனில் அழகுப்படுத்தும் முறை, ஹெச்டிஆர் முறை, போத்தி முறை போன்ற எண்ணற்ற தேர்வுகளை அளித்து, முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்களை ஒரே நேரத்தில் இயக்கி படங்களை எடுக்கும் வசதியை அளிக்கிறது. நேரலை முறையைப் பயன்படுத்தி, யூடியூப் மற்றும் பேஸ்புக்கிற்கான நேரலை ஸ்ட்ரீம் உள்ளடக்கத்தை தயாரிக்க முடியும்.

பின்பக்க கேமரா 2எக்ஸ் வரையிலான படத்தைப் பெரிதாக்கும் வசதியை அளித்து, சிறந்த ஃபோக் படங்களை எடுக்க முடிகிறது. இந்த ஃபோனின் இரட்டை கேமரா சிறப்பாக இருந்தாலும், ஹானர் வியூ 10 மற்றும் ஒன்பிளஸ் 5டி ஆகிய ஃபோன்களுக்கு சவால்விடும் வகையில் இல்லை. கேமரா படங்களை மெருகேற்றும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை இது பயன்படுத்தி கொள்கிறது. வழக்கமான பகல் நேரத்தில் எடுக்கப்படும் படங்கள் சிறப்பாக வருகின்றன. ஆனால் ஒளி குறைந்த இடத்தில் இந்தக் கேமராவின் செயல்பாடு புகழும் வகையில் இல்லை. ஏனெனில் அந்தச் சூழ்நிலைகளில் எடுக்கப்படும் படங்களில் அதிக அளவிலான சிதறல்கள் மற்றும் தெளிவற்ற நிலையைக் காண முடிகிறது. சுமாரான ஒளி உள்ள சூழ்நிலையில், எடுக்கப்படும் படங்கள் சிறப்பாக வருகின்றன.

How to check PF Balance in online (TAMIL)
  பேட்டரி

பேட்டரி

இந்த ஃபோனில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் மற்றும் சிறப்பான 3800 பேட்டரி மூலம் பேட்டரி கரையும் திறன் மிகவும் மந்தமாக நடைபெறுவதால், சிறந்த செயல்பாட்டை அளிக்கிறது. சமூக வலைதளங்கள் மற்றும் மெசேஜிங் அப்ளிகேஷன்களின் பயன்பாடு என்று சுமாரான பயன்பாட்டில் இருக்கும்பட்சத்தில், ஒரு நாளுக்கு மேலாக பேட்டரி தாக்குபிடிக்கிறது.

குவால்காம் விரைவு சார்ஜ் 3.0-யை கொண்டுள்ளதால், இந்த ஸ்மார்ட்போன் முழுமையான சார்ஜாக, ஒரு மணிநேரத்திற்கு சற்று அதிகமாக மட்டுமே எடுத்து கொள்கிறது. உயர்தர கேமிங் அல்லது பன்முக பயன்பாட்டை கொண்ட கனமான அப்ளிகேஷன்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் பட்சத்தில், பேட்டரி விரைவாக கரைகிறது.

முடிவு

நோக்கியா 7 பிளஸை பொறுத்த வரை, கேமராவில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால், ஒளிக் குறைந்த படமெடுப்பு சிறப்பாக அமைந்திருக்கும். மற்றபடி, சிறந்த டிஸ்ப்ளே, பேட்டரி திறன் போன்றவற்றை அளிக்கும் நோக்கியா 7 பிளஸ், நாம் அளிக்கும் பணத்திற்கு தகுதி வாய்ந்ததாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 7 Plus review A competent mid ranger; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X