நோக்கியா என்றால் என்ன பெரிய கொம்பா.? கடுப்பை கிளப்பும் இந்திய விலை.!

நிறுவனத்தின் ஹை-எண்ட் ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 8 சிராக்கோ ஆனது ரூ.49,999/-க்கு வாங்க கிடைக்கிறது.

|

நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, அதன் நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன்களின் இந்திய சந்தைக்கான ப்ரீ-ஆர்டரை (முன் பதிவுகள்) திறந்து விட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும்கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த MWC 2018 நிகழ்வில் அறிவிக்கப்பட்டதும், பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் அதன் உலகளாவிய வெளியீட்டை சந்தித்ததும், தற்போது ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் அதன் இந்திய விற்பனை சந்திக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரு ஸ்மார்ட்போன்களின் அதிகாரபூர்வமான இந்திய விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் என்ன.?

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று (ஏப்ரல் 20-ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. ரூ.25,999/- என்கிற இந்திய விலை நிர்ணயத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் இந்தியா மற்றும் நோக்கியா.காம்.போன்ஸ் தளத்தில் அணுக கிடைக்கிறது.

அம்சங்கள்

அம்சங்கள்

நோக்கியா 7-ன் அம்சங்களை பொறுத்தவரை, ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி, 18:9 திரை விகிதம் கொண்ட 6 இன்ச் முழு எச்டி + காடிஸ்பிளே (1080 x 2160 பிக்சல்கள் தீர்மானம்), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, இரண்டு 12எம்பி டூயல் ரியர் கேமரா (ஒரு எப் / 1.75 துளை + ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ்), ஒரு 16எம்பி செல்பீ கேமரா, கார்ல் செய்ஸ் ஆப்டிக்ஸ் ஆதரவு, ஓஸோ ஆடியோ தொழில்நுட்பம், 3800mAh பேட்டரி, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

நோக்கியா 8 சிரோக்கோ

நோக்கியா 8 சிரோக்கோ

நிறுவனத்தின் ஹை-எண்ட் ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 8 சிராக்கோ ஆனது ரூ.49,999/-க்கு வாங்க கிடைக்கிறது. நோக்கியா 7 போல் இல்லாமல் நோக்கியா 8 சிராக்கோ ஆனது பிரபல இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டிலும் மற்றும் நோக்கியா நிறுவனத்தின் அதிகாரபூர்வமான தளத்திலும் அணுக கிடைக்கிறது.

அம்சங்கள்

அம்சங்கள்

அம்சங்களை பொறுத்தவரை, 5.5 இன்ச் பி-ஓஎல்இடி டிஸ்ப்ளே, 16: 9 திரை விகிதம், கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, 6ஜிஇ ரேம் மற்றும்128ஜிபி உள்ளடக்க சேமிப்பு, எப் / 1.75 துளை உடனான ஒரு முதன்மை 12எம்பி + 12எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பு, ஒரு 5எம்பி செல்பீ கேமரா, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட், 3260mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
கேள்விக்குறி தான்.!

கேள்விக்குறி தான்.!

சியோமியின் சூப்பர் பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை தாக்கும் முயற்சியில், இந்திய சந்தையில் வெளியாகவுள்ள ஹானர் பி20 வரிசை ஸ்மார்ட்போன்கள் கூட ரூ.11,000 முதல் ரூ.18,000/- வரை என்கிற புள்ளிக்குள் விற்பனை செய்யப்படும். அதிக பட்சமாக ரூ.15,000 - ரூ.20,000/- என்கிற புள்ளிக்குள் தான் இருக்கும் என்று கூறப்படுகிற நிலைப்பாட்டில் ரூ.25,999/- என்கிற ஆரம்ப விலை கொண்டு வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் எப்படி சந்தையை ஆட்கொள்ளும் என்பது கேள்விக்குறி தான்.!

Best Mobiles in India

English summary
Nokia 7 Plus, Nokia 8 Sirocco Pre-Orders Now Open in India: Price, Specifications, Features. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X