Subscribe to Gizbot

முதலில் ரூ.33,000/- எனப்பட்டது; இப்போது விலையை சொன்னால் நம்ப மாட்டீர்கள்.!

Written By:

இந்த 2018-ஆம் ஆண்டில் தனது போட்டியாளர்களை ஒருவழி செய்துவிட வேண்டுமென எச்எம்டி க்ளோபல் (நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள) நிறுவனம் முடிவு செய்துவிட்டது போலும்.

நிகழ்ந்து முடிந்த எம்டபுள்யூசி 2018 நிகழ்வில், எச்எம்டி குளோபல் ஆனது இந்த 2018-ஆம் ஆண்டிற்கான அதன் சுவாரஸ்யமான நோக்கியா கருவிகளை அறிவித்தது. அவைகள் நோக்கியா 6 (2018), நோக்கியா 1 அண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன், நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஆகியவைகள் ஆகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அதிக கவனத்தை ஈர்த்த ஸ்மார்ட்போன் எது.?

அதிக கவனத்தை ஈர்த்த ஸ்மார்ட்போன் எது.?

இந்த நான்கு கருவிகளில் அதிக கவனத்தை ஈர்த்த ஸ்மார்ட்போன் எதுவென்று கேட்டால் - நோக்கியா 7 பிளஸ் என்ற பதிலே பெரும்பாலும் எழுகின்றது. ஏனெனில் இதுவொரு மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ் வெளியாகும், சிறப்பான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனாக உள்ளது.

இந்திய விலை நிர்ணயம் என்ன.?

இந்திய விலை நிர்ணயம் என்ன.?

அதாவது நோக்கியா 7 ப்ளஸ் ஆனது பட்ஜெட் கருவியான நோக்கியா 6 மற்றும் நிறுவனத்தின் பிளாக்ஷிப் (தலைமை) ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 8 ஆகிய இரண்டிற்கும் உள்ள இடைவெளியை நிரப்புகிறது. இதன் இந்திய விலை நிர்ணயம் என்ன.? இதன் இந்திய வெளியீடு எப்போது.? நோக்கியா 7 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்னென்ன.? என்பதை விரிவாக காண்போம்.

4ஜிபி ரேம் + 64ஜிபி - விலை.?

4ஜிபி ரேம் + 64ஜிபி - விலை.?

நோக்கியா 7 ப்ளஸ் ஆனது இந்த மார்ச் மாதம் அல்லது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், அதன் இந்திய விற்பனையை சந்திக்கும் என்று ஊகங்கள் உள்ளன. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், நோக்கியா 7 பிளஸ்-ன் 4ஜிபி ரேம் + 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.23,698/-க்கு வாங்க கிடைக்கலாம்.

6ஜிபி ரேம் + 64ஜிபி - விலை.?

6ஜிபி ரேம் + 64ஜிபி - விலை.?

மறுகையில் உள்ள, 6ஜிபி ரேம் + 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.25,700/-க்கு இந்திய சந்தையை எட்டலாம். ஆகமொத்தம் எப்படி பார்த்தாலும் நோக்கியா 7 ப்ளஸ்-ன் இந்திய விலை நிர்ணயமானது ரூ.23,000 தொடங்கி ரூ,25,000/-க்குள் அடையும் என்பது தெளிவாகிவிட்டது. இனி நாம் கவனிக்க வேண்டியதெல்லாம் இதன் அம்சங்களை மட்டுமே.!

6 இன்ச் டிஸ்ப்ளே (18: 9 விகிதம்).!

6 இன்ச் டிஸ்ப்ளே (18: 9 விகிதம்).!

நோக்கியா 7 பிளஸ் ஆனது 6 இன்ச் எல்சிடி பிளஸ் முழு எச்டி டிஸ்ப்ளே (18: 9 விகிதம்) கொண்டிருக்கிறது. இந்த தொலைபேசி சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 660 செயலி கொண்டு இயங்கும் ,ஆற்றும் மேற்குறிப்பிட்டபடி இரண்டு மாதிரிகளில் வெளியாகும்.

256 ஜிபி மெமரி நீட்டிப்பு.!

256 ஜிபி மெமரி நீட்டிப்பு.!

அதிகபட்சம் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு தான் கொண்டுள்ளது என்பதால், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவும் வழங்குகிறது. இருப்பினும் இந்த மெமரி நீட்டிப்பு திறன் சார்ந்த, எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ.!

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ.!

இயங்குதளத்தை பொறுத்தமட்டில், நோக்கியா 7 ப்ளஸ் ஆனது ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ (பெட்டிக்கு வெளியே) கொண்டுள்ளது. மேலும், இக்கருவி ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் ஒரு பகுதியாகும், எனவே சில சூப்பர் வேகமான ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகளை (அப்டேட்ஸ்) எதிர்பார்க்கலாம்.

3800எம்ஏஎச் அளவிலான பேட்டரி.!

3800எம்ஏஎச் அளவிலான பேட்டரி.!

இந்த தொலைபேசியின் பேட்டரி மிகவும் சுவாரசியமானதொரு அம்சமாக உள்ளது. இது ஒரு 3800எம்ஏஎச் அளவிலான பேட்டரியை கொண்டுள்ளடித்து. நிறுவனத்தின்படி ஒரு முழுமையான சிங்கிள் சார்ஜ் ஆனது 2 நாட்களுக்கு நீடிக்கும். எபப்டியாயினும் நிச்சயமாக இது குறைவான செயல்திறன் கொண்ட பேட்டரி அல்ல என்பது மட்டும் உறுதி.

இரட்டை பின்பக்க கேமரா.!

இரட்டை பின்பக்க கேமரா.!

இந்த தொலைபேசியின் கேமராவைப் பற்றி பேசுகையில், இது ஒரு இரட்டை பின்பக்க கேமரா அமைப்பை வழங்குகிறது மற்றும் வழக்கம்போல செய்ஸ் (ZEISS) லென்ஸ்கள் கொண்டுள்ளது. இது ஆழமான புகைப்படங்களை பதிவு செய்வதற்கும், 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் செய்யவும் அனுமதிக்கிறது.

16எம்பி செல்பீ கேமரா.!

16எம்பி செல்பீ கேமரா.!

அளவீடுகளை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் எப் /1.75 என்கிற துளை கொண்ட 12 மெகாபிக்சல் முதன்மை கேமராவும் உடன் எப் / 2.6 என்கிற துளை கொண்ட 13எம்பி இரண்டாம் நிலை கேமராவும் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. அதுவும் எப் / 2.0 என்கிற துளை கொண்ட செய்ஸ் லென்ஸ் ஆகும்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
 நோக்கியா 1, நோக்கியா 6 (2018) மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ.!

நோக்கியா 1, நோக்கியா 6 (2018) மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ.!

ஒட்டுமொத்தமாக, நோக்கியா 7 ப்ளஸ்-ன் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் சாதனத்தின் அம்சங்களானது மிகவும் சிறப்பானதாக உள்ளது. உடன் இதே விலை வரம்பில் உள்ள இதர ஸ்மார்ட்போன்களையும் ஒருவழி செய்ய தகுதியுடையதாக உள்ளது. மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில், நோக்கியா 7 ப்ளஸ் உடன் அறிமுகமான நோக்கியா 1, நோக்கியா 6 (2018) மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஆகியவற்றின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில்..

நோக்கியா 1

நோக்கியா 1

மிக நீண்ட காலமாக வதந்திக்கப்பட்ட நோக்கியா 1 ஆனது எதிர்பார்க்கப்பட்டபடியே நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக வெளியாகியுள்ளது. அதாவது ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ பதிப்பு) கொண்டுள்ளது.

நுழைவு-நிலை வன்பொருள்

நுழைவு-நிலை வன்பொருள்

நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் உலகளாவிய விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் சுமார் ரூ.5,500/-இருக்கலாம் மற்றும் அதற்கேற்ற நுழைவு-நிலை வன்பொருள் அம்சங்களைக் கொண்டுள்ளது. நோக்கியா 1 ஆனது ஒரு 4.5 இன்ச் டபுள்யூவிஜிஏ டிஸ்ப்ளே மற்றும் அகற்றக்கூடிய பின்பக்க பேனல் கொண்டுள்ளது.

நோக்கியா 6 (2018) பதிப்பு

நோக்கியா 6 (2018) பதிப்பு

எல்லோரும் எதிர்பார்த்தபடி, நோக்கியா 6 (2018) க்ளோபல் பதிப்பானது - சீனாவில் தொடங்கப்பட்ட மாதிரியே - ஒரு திட இடைநிலை வன்பொருள் அம்சங்களை வழங்குகிறது. இது 5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

பல்வேறு ரேம், சேமிப்பு

பல்வேறு ரேம், சேமிப்பு

பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டுள்ள இக்கருவி ஒரு 3000எம்ஏஎச்பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது ஒரு 16எம்பி பின்பக்க கேமரா உடன் பல்வேறு ரேம், சேமிப்பு விருப்பங்கள் வருகிறது.

ரூ. 22,200/-க்கு வாங்க கிடைக்கும்

ரூ. 22,200/-க்கு வாங்க கிடைக்கும்

இந்த நோக்கியா கருவியில் ஃபேஸ் அன்லாக் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் நிலையான சார்ஜிங் திறனுடன் சேர்த்து வயர்லெஸ் சார்ஜ் அம்சமும் கொண்டுள்ளது. இந்த புதிய நோக்கியா 6 (2018) ஆனது மூன்று வண்ணங்களில் வருகிற ஏப்ரல் 2018முதல் ரூ. 22,200/-க்கு வாங்க கிடைக்கும்.

நோக்கியா 8 சிரோக்கோ

நோக்கியா 8 சிரோக்கோ

இது ஒரு ஆச்சரியமான வெளியீடாகும். நோக்கியா 8 சிராக்கோ ஆனது நிறுவனத்தின் மற்றொரு முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். இது வைர வெட்டுகளுடன் ஒரு எஃகு உடல் அமைப்பை கொண்டு வருகிறது. ஐபி68 நீர் மற்றும் தூசி சான்றிதழ், வயர்லெஸ் சார்ஜ் ஆதரவுடன் வரும் இந்த நோக்கியா 8 சிரோக்கோ ஆனதும் மற்ற கருவிகளை போலவே வருகிரியா ஏப்ரல் 2018 முதல் விற்பனையை தொடங்கும்.

டெலிஃபோட்டோ

டெலிஃபோட்டோ

நோக்கியா 8 சிராக்கோவின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இதன் இரண்டாம் நிலை சென்சார் ஆனது ஒரு டெலிஃபோட்டோ லென்ஸாக பணியாற்றும்.

ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி

6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்டிருந்தாலும் கூட இது ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, நோக்கியா 8 சிரோக்கோவின் உலகளாவிய பதிப்பானது சுமார் ரூ.60,000/- என்கிற புள்ளியை எட்டலாம்

நோக்கியா 8110 4ஜி பீச்சர்

நோக்கியா 8110 4ஜி பீச்சர்

இந்த நான்கு கருவிகள் தவிர்த்து நோக்கியா 8110 4ஜி பீச்சர் போனும் அறிமுகமாகியுள்ளது. மேலும் பல ஸ்மார்ட்போன்கள் பற்றிய உடனடி அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வளைத்தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Nokia 7 Plus Might Cost Rs 23,000 in India. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot