Subscribe to Gizbot

மொபைல் கேம் விளையாட ஆர்வமா? உங்களுக்காகவே வந்துள்ளது நோக்கியா 7 ப்ளஸ்.!

Posted By: Vivek Sivanandam

மற்ற எந்த ஸ்மார்ட்போன்களிலும் இல்லாத வகையில் 6 இன்ச் திரையுடன், அலுமினிய வெளிப்புற வடிவமைப்புடன் கலக்கலாக வெளியாகியுள்ளது நோக்கியா 7ப்ளஸ். 18:9டிஸ்ப்ளே விகிதத்துடன் 1080×2160 பிக்சல் கொண்ட ஒரே HMD குளோபல் ரேன்ஞ் இது மட்டும் தான். இந்தியாவில் ஸ்னேப்டிராகன் 660 SoCகொண்ட சிலகருவிகளில் இதுவும் ஒன்று.

செயற்கை நுண்ணறிவு, நவீன போட்டோகிராபி மற்றும் முக்கியமாக மேம்படுத்தப்பட்ட கேமிங் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்டது ஸ்னேப்டிராகன் 660 SoC. மேலும் நோக்கியா 7 ப்ளஸ்-ல் 4GB ரேம் மற்றும் 3800mAh பேட்டரியும் உள்ளது. இது போதாதா? மொபைலில் கேம் விளையாட...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கேம் விளையாட இந்த மொபைல் சிறந்ததா? இதோ கண்டறிவோம்

கேம் விளையாட இந்த மொபைல் சிறந்ததா? இதோ கண்டறிவோம்

இதை கண்டறிய நமக்கு பிடித்தமான, சிறந்த வலிமையான விசுவல் கொண்ட கேம்களை தேர்ந்தெடுத்தோம். Battle royale shooter PUBG mobile, arcade- inspired Asphalt 8, Dota2- clone Arena of Valor போன்றவை. ஆனால் GTA san andread கேம் காம்பேக்டபிலிடி பிரச்சனைகளால் தேர்வு செய்யவில்லை. Subway surfers மற்றும்
candy crush போன்ற கேம்களும் தேர்வுசெய்யப்படவில்லை. ஆனாலும், நம் பட்டியலில் உள்ளவை நன்றாக செயல்பட்டால் இவையும் நன்றாக செயல்படும்.இந்த கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், நோக்கியா7 ப்ளஸ் குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும் கேம் விளையாடும் மொபைலா என அறிவதே..

 மென்மையான ஸ்மார்ட்போன்

மென்மையான ஸ்மார்ட்போன்

முதலில் கவனிக்கவேண்டிய, மொபைலை கையில் பிடிப்பதற்கு எவ்வளவு மென்மையாக உள்ளது என்பது தான். அதுவும் குறிப்பாக கிடைமட்டமாக பிடிக்கும் போது. HMD global பரிந்துரையின் படி செராமிக் கோட்டிங் இருப்பதால், கையை விட்டு நழுவ வாய்ப்புள்ளது. இந்த மொபைலில் PUBG mobile என்ற கேமை முதலில் விளையாடி பரிசோதித்தோம். வெகு சீக்கிரத்தில் மென்மையான ஸ்மார்ட்போன்
அனுபவத்தை பெற்றோம். மிகப்பெரிய திரையை கொண்ட நோக்கியா7 ப்ளஸ்-ல் விளையாடும் அனுபவம் மிகச்சிறப்பு. ஆயுதங்களின் மாடல்கள், பசுமை, வெடிப்புகளின் போது சிறப்பான அனுபவத்தை அளித்தது.ஆனால் ஒன்ப்ளஸ்3டி யில் விளையாடிய அனுபவத்தை இது வழங்கவில்லை
என்பதே உண்மை.

கிராபிக்ஸ்

கிராபிக்ஸ்

அடுத்ததாக Asphalt8 கேமை விளையாடினோம். மிகவும் பிரபலமான ரேஸிங் கேமான இதில் அதிகப்படியான கிராபிக்ஸ் உள்ளது. காட் ரேஸ், பனி , மழை போன்றவற்றை எளிதாக பயன்படுத்த முடிந்தது. சிறப்பாக மேம்படுத்தபட்ட கேமான இதன் செயல்திறனுக்கு அத்தாட்சியாக எதிரொளிப்பு தொந்தரவுகள் இல்லாமல் இருந்தது.

 எபெக்ட்ஸ்

எபெக்ட்ஸ்

அடுத்ததாக breakneck கேமை விளையாடினோம். இதனுடைய உயர்தர முன்னமைப்பும், ராக்கெட் போன்ற வேகமும், எபெக்ட்ஸ் மிகவும் அற்புதமானது. ஆனால் இந்த கேமை விளையாடும் போது நோக்கியா 7 ப்ளஸ் சற்று சூடாகிறது. மற்ற கேம்களை விளையாடும் போது இந்த பிரச்சனை இல்லை.அலுமினிய வெளிப்புற பகுதி விளையாடும் போது நன்கு சுடும்.

How to check PF Balance in online (TAMIL)
 சிறப்பாக விளையாட உதவும்

சிறப்பாக விளையாட உதவும்

கடைசியாக நாம் பரிசோதித்தது Arena of Valor கேம். Dota2, league of legends போன்றவற்றிற்கு இணையான இது விரைவாக எதிர்விளைவாற்றும் தன்மையால் பிரபலமானது. ப்ரேம் ரேட் கவுன்டர் உள்ள சில ஸ்மார்ட்போன் கேம்களில் இதுவும் ஒன்று. இந்த ப்ரேம் ரேட் மோட் என்பது அதிக திறனுடன், அதிக பேட்டரியை உபயோகித்து சிறப்பாக விளையாட உதவும். சராசரியாக நொடிக்கு 56 முதல்57 ப்ரேம் வரை காட்டக்கூடியது. இந்த மோடை ஆப் செய்தால் நொடிக்கு 30 ப்ரோம்கள் காட்டப்படும். ஆனால் அதில் சிறப்பான அனுபவத்தை பெறலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Nokia 7 Plus Gaming Performance Review ; Read more about this in Tamil GizBot

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot