நோக்கியா 7 பிளஸ் புகைப்படம் ஆன்லைனில் கசிந்தது(அம்சங்கள்).!

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash
|

அடுத்த வாரம் தொடங்கும் எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, எச்எம்டி குளோபல் நிறுவனம், தற்சமயம் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படம் ஆன்லைனில் கசிந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 18:9 என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கைரேகை சென்சார் இரட்டை கேமரா போன்ற அமைப்புகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660:

ஸ்னாப்டிராகன் 660:

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு :

இரட்டை பின்புற கேமரா அமைப்பு :

நோக்கியா 7 பிளஸ் ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டு வெளியாகவுள்ளது. இந்த கசிவின் படி, நோக்கியா 7 பிளஸ் ஆனது அதன் பின்புறத்தில் 12எம்பி மற்றும் 13எம்பி ரியர் கேமராக்கள் கொண்டு வருகிறது. இதன் இரண்டாம்நிலை சென்சார் ஆனது ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் போர்ட்ரேட் பயன்முறையை வழங்கும்.

பொத்தீ அம்சம் :

பொத்தீ அம்சம் :

முன்பக்கத்தை பொறுத்தமட்டில், எப் / 2.0 துளை உடனான ஒரு 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறுகிறது. மேலும் இதன் கேமராக்கள் முன் மற்றும் பின்பக்கத்தை ஒரே நேரத்தில் பதிவு செய்யக்கூடிய கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
3300எம்ஏஎச்:

3300எம்ஏஎச்:

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 7 Plus first live image leaked online; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X