இதுதான் நோக்கியாவின் பெஸ்ட் ஸ்மார்ட்போன்: எவ்ளோ விலை சொன்னாலும் வாங்கலாம்.!

மேலுமொரு கான்செப்ட் ரெண்டர் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது நோக்கியா 7 ப்ளஸ் ஆனது ஒரு உயர்தர தொலைபேசி என்பதை வெறுமனே அதன் வடிவமைப்பின் மூலம் வெளிப்படுத்துகிறது.

|

நோக்கியா நிறுவனத்தை தத்தெடுத்துள்ள நிறுவனமான எச்எம்டி க்ளோபல் ஆனது நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனை நிகழப்போகும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (எம்டபிள்யூசி) 2018-ல் அறிவிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் நோக்கியாவின் பெஸ்ட்: எவ்ளோ விலை சொன்னாலும் வாங்கலாம்.!

இம்மாத இறுதியில் நடக்கும் அறிமுக விழாவின் போது நோக்கியா 7 ப்ளஸ் ஆனது பிற நோக்கியா சாதனங்களுடன் சேர்ந்து வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நோக்கியா 7 பிளஸ் கஸ்மார்ட்போனின் ஸ்லைடர் புகைப்படங்கள் கசிந்தன. அதன் மூலம் இதுவரை நாம் கண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களிலேயே சிறந்தது நோக்கிய 7 ப்ளஸ் தான் என்பதை அறிய முடிந்தது.

நோக்கியா 7 ப்ளஸ்

நோக்கியா 7 ப்ளஸ்

அதனை உறுதி செய்யும் வண்ணம் மேலுமொரு கான்செப்ட் ரெண்டர் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது நோக்கியா 7 ப்ளஸ் ஆனது ஒரு உயர்தர தொலைபேசி என்பதை வெறுமனே அதன் வடிவமைப்பின் மூலம் வெளிப்படுத்துகிறது.

வருகைவெகுதொலைவில் இல்லை

வருகைவெகுதொலைவில் இல்லை

உடன் வெளியான புகைப்படங்களின் கீழ் நாம் எதிர்நோக்கும் தொலைபேசியின் வருகையானது வெகுதொலைவில் இல்லை என்பதோடு சேர்த்து அதன் சில விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த இடத்தில நோக்கியா 7-ஐப் பற்றி நாம் பேசியே ஆகவேண்டும்.

கண்ணாடி சேஸ் வடிவமைப்பு

கண்ணாடி சேஸ் வடிவமைப்பு

இந்த ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபர் 2017 ல் அறிமுகமானது (சீனாவில் பிரத்தியேகமாக கிடைக்கிறது). நோக்கியா 7 ஸ்மார்ட்போன் மிகவும் கவர்ச்சிகரமான அனைத்து கண்ணாடி சேஸ் வடிவமைப்பை பெற்று மிகவும் அட்டகாசமானதொரு கருவியாக வெளியானது.

புல் ஸ்க்ரீன் டிசைன்

புல் ஸ்க்ரீன் டிசைன்

அதேபோல நோக்கியா 7 பிளஸ் ஆனதும் மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு அனைத்து கண்ணாடி சேஸ் வடிவமைப்பை தன்னுள் தக்கவைத்துகொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான புகைப்படங்கள் உண்மையானால், நோக்கியா 7 பிளஸ் ஆனது நிறுவனத்தின் முதல் புல் ஸ்க்ரீன் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும். வெளியான புகைப்படத்தில் அது தெளிவாக தெரிகிறது.

6 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே

6 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே

உடன் நோக்கியா 7 பிளஸ் ஆனது அதன் முன் மற்றும் பின்பக்கம் கண்ணாடி பேனல்களையும் இடையே அலுமினிய கட்டமைப்பையும் பெற்றுள்ளது. எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தமட்டில் நோக்கியா 7 பிளஸ் ஆனது 2160 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம். இது 18: 9 என்கிற திரை விகிதத்துடன் வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

18: 9 என்கிற அளவிலான திரை விகிதம்

18: 9 என்கிற அளவிலான திரை விகிதம்

அதாவது நோக்கியா 7 ப்ளஸ் தான் நிறுவனத்தின் முதல் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட ஸ்மார்ட்போனாக களமிறங்கும். இந்த தகவலானது சைனீஸ் பைடு மூலம் வெளியாகியுள்ளதென்பதும், வெளியான தகவல்களானது நோக்கியா 7 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் பிரசென்டேஷன் ஸ்லைடர்களின் புகைப்படப்படங்களாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி

வெளியான புகைப்படங்களின்கீழ், நோக்கியா 7 பிளஸ் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் மூலம் இயக்கப்படுவதாகவும் மற்றும் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டிருக்கும் என்பதையும் அறிய முடிகிறது. மற்றொரு மேம்படுத்தலாக நோக்கியா 7 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட வழக்கமான ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி அல்லாது இக்கருவியில் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி இடம்பெறலாம்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
அட்ரெனோ 512 ஜிபியூ

அட்ரெனோ 512 ஜிபியூ

மேலும் இந்த சிப்செட் அட்ரெனோ 512 ஜிபியூ உடன் இணைக்கப்பட்டுருக்கும். உடன் இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜ் கொண்டுவருமென்பதை வெளிப்படுத்திய லீக்ஸ் ஸ்லைடர்கள் அதன் பேட்டரி திறன் பற்றிய வார்த்தைகளை கொண்டிருக்கவில்லை.

செராமிக் பூச்சுடன் கூடிய உலோகத் தோற்றம்

செராமிக் பூச்சுடன் கூடிய உலோகத் தோற்றம்

மேலும் முன்னர் வெளியான ஸ்லைடர் புகைப்படத்தில் நோக்கியா 7 பிளஸ் ஆனது, அதன் பின்புறத்திம் விளிம்புகளில் செராமிக் பூச்சுடன் கூடிய உலோகத் தோற்றத்துடன் உள்ளது. நினைவுகூரும் வண்ணம், நோக்கியா 7 ஆனது கண்ணாடி உடல் வடிவமைப்பு கொண்டு வெளியான நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

மேலுமொரு பிரதான மேம்படுத்தலாக நோக்கியா 7 பிளஸ் ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டு வெளியாகவுள்ளது. இந்த கசிவின் படி, நோக்கியா 7 பிளஸ் ஆனது அதன் பின்புறத்தில் 12எம்பி மற்றும் 13எம்பி ரியர் கேமராக்கள் கொண்டு வருகிறது. இதன் இரண்டாம்நிலை சென்சார் ஆனது ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் போர்ட்ரேட் பயன்முறையை வழங்கும்.

பொத்தீ அம்சம்

பொத்தீ அம்சம்

முன்பக்கத்தை பொறுத்தமட்டில், எப் / 2.0 துளை உடனான ஒரு 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறுகிறது. மேலும் இதன் கேமராக்கள் முன் மற்றும் பின்பக்கத்தை ஒரே நேரத்தில் பதிவு செய்யக்கூடிய கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 (2018)

நோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 (2018)

எச்எம்டி க்ளோபல் நிறுவனம் ஏற்கனவே பிப்ரவரி 25-க்கு அதன் அடுத்த ஸ்மார்ட்போனிற்கான அறிமுக நிகழ்ச்சியை அமைத்துள்ளது. இந்நிகழ்வில் ஃபின்னிஷ் நிறுவனத்தின் நோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8-ன் 2018 பதிப்பு ஆகியவைகளுடன் கூறப்படும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகலாம்.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

மற்றொரு சிறப்பம்சமாக நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டிருக்கும் மற்றும் விரைவில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ புதுப்பிப்பையும் பெறும். மேலும் பல நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மற்றும் வேர்ல்ட் மொபைல் காங்கிரஸ் 2018 நிகழ்வு பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Nokia 7 Plus Concept Renders Reveal A beautiful Design, More Details Inside. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X