அசத்தலான நோக்கியா 7 பிளஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!
இக்கருவி பெசல்-லெஸ் வடிவமைப்பு மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு வெளிவரும், அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் கேமரா வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 7 பிளஸ் வெளியீட்டு தேதியை தற்சமயம் அறிவித்துள்ளது, அதன்படி பார்சிலோனாவில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் வரவிருக்கும் மொபைல் உலக காங்கிரஸ் நிகழ்ச்சியில் நோக்கியா 7 பிளஸ் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
மொபைல் உலக காங்கிரஸ் நிகழ்ச்சி இந்த மாதம் 25-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி நடைபெறும், இந்த நிகழ்ச்சியில் நோக்கியா 9, நோக்கியா 4, நோக்கியா 1, நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 8(2018) போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 660:
நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

வடிவமைப்பு:
இக்கருவி பெசல்-லெஸ் வடிவமைப்பு மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு வெளிவரும், அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் கேமரா வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி ரேம்:
நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.


பேட்டரி:
இதற்கு முன்பு வந்த நோக்கியா 7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு 3000எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டது, இப்போது வரும் நோக்கியா 7 பிளஸ்
ஸ்மார்ட்போன் மாடலில் 3500எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்ப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 660:
நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி வகை-சி போர்ட், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications