Home
Mobile

ஒரே நேரத்தில் நோக்கியா 1 & நோக்கியா 7 ப்ளஸ் அறிமுகம்; சாம்சங் உடன் நேரடி மோதல்.!

ஆனால் மிகவும் ஆச்சரியமாக நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனும் கூட ஆண்ட்ராய்டுஒன் நிரலின் ஒரு பகுதி என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.

By Muthuraj

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது அதன் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களையும், வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி அறிமுகம் செய்ய தீவீரமாக பணியாற்றி வருகிறது.

ஒரே நேரத்தில் நோக்கியா 1 & நோக்கியா 7 ப்ளஸ்; சாம்சங் உடன் நேரடி மோதல்!

இன்னும் சுவாரசியமாக அதே நாளில் (பிப்ரவரி 25) சாம்சங் நிறுவனமும் அதன் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதால் பல ஆண்டுகள் கழித்து நோக்கியாவும் சாம்சங் நிறுவனமும் நேருக்கு நேர் மோதல் நிகழ்த்தவுள்ளது. இந்த மோதல் நிகழப்போகும் களம் - பார்சிலனோவில் நடக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 1

நோக்கியா 1

இன்று வெளியாகியுள்ள ஒரு கசிவின்படி, எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் இரண்டு கருவிகள் - நோக்கியா 1 மற்றும் நோக்கியா 7 பிளஸ் - ஆன்லைனில் காணப்பட்டுள்ளது. நோக்கியா 1 ஆனது கூகுள் ஆண்ட்ராய்டி கோ திட்டத்தின் பாகமாக இருக்குமென்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 7 பிளஸ்

ஆனால் மிகவும் ஆச்சரியமாக நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனும் கூட ஆண்ட்ராய்டுஒன் நிரலின் ஒரு பகுதி என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது. இந்த தகவல் பிரபல லீக்ஸ்டர் ஆன இவான் பிளஸ் மூலம் அதிகாரப்பூர்வ புகைப்படங்ளுடன் வெளியிலாகியுள்ளது.

நோக்கியா 1 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு

நோக்கியா 1 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு

காணப்படும் நோக்கியா 1 ஆனது ஒரு பழைய நோக்கியா ஆஷா தொலைபேசியை நமக்கு நினைவூட்டுகிறது, அதே நேரத்தில் நோக்கியா 7 பிளஸ் ஆனது நவீன காலத்திற்கு ஏற்ற 18: 9 அளவிலான திரை விகிதம் கொண்டு காட்சியளிக்கிறது. நோக்கியா 1 ஆனது பபிரபலமான பழைய லூமியா தொலைபேசிகளை போல பல்வேறு வண்ண விருப்பங்கள் வரும். வெளியாகியுள்ள புகைப்படங்கள் ஆனது நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் பிளாக் அண்ட் ரெட் நிற வகைகளை காட்சிப்படுத்துகிறது.

முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் உணரி

முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் உணரி

நோக்கியா போன்களில், கடந்த 2010-ல் மீண்டும் தொடங்கப்பட்ட சில வடிவமைப்புகளில் இந்த நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. வடிவமைப்பை பொறுத்தமட்டில், மூலைகளில் வட்டமிடப்பட்டுள்ளது, மேலும் அது நெக்ஸஸ் 4 போல் உள்ளது. முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் உணரிகளுடன் நோக்கியா பிராண்டிங் சின்னமானது கருவியின் மேலே பொறிக்கப்பட்டுள்ளது.

ஆன் ஸ்க்ரீன் நேவிகேஷன் பொத்தான்

ஆன் ஸ்க்ரீன் நேவிகேஷன் பொத்தான்

தொலைபேசியின் தாடை பகுதியில் எந்தவிதமான பொத்தானும் இல்லை. எனவே இந்த தொலைபேசி ஆன் ஸ்க்ரீன் நேவிகேஷன் பொத்தான்களை கொண்டு வரலாம். பின்புற வடிவமைப்பை பொறுத்தமட்டில், பின்புற கேமரா மற்றும் எல்இடி ஃப்ளாஷ் தொகுதி, நோக்கியா லோகோ மற்றும் ஒரு சிறிய ஸ்பீக்கர் கிரில் ஆகியவைகள் உள்ளன.

உலகின் முதல் லைட் ஓஎஸ் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்

உலகின் முதல் லைட் ஓஎஸ் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்

நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் மேல் பக்கம் ஒரு 3.5மிமீ ஹெட்ஜாக் இடம்பெறுவதும் புகைப்படம் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. உடன் இக்கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக இது ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயக்கமுறைமையின் கீழ் இயங்கும். நோக்கியா 1 ஸ்மார்ட்போன் தான உலகின் முதல் லைட் ஓஎஸ் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் ஆகும்.

நோக்கியா 7 பிளஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு

நோக்கியா 7 பிளஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், இந்த தேதி வரை எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடம் இருந்து வெளியான சிறந்த நோக்கியா தொலைபேசியாக இருக்கும். கூடுதல் சிறப்பம்சம் என்னவெனில் தற்போது வெளியாகியுள்ள நோக்கியா 7 பிளஸ் புகைப்படத்தின் பின்புறத்தில்ஆண்ட்ராய்டு ஒன் லோகோவை காணமுடிகிறது. இதன் பொருள், நோக்கியா 7 பிளஸ் ஆனதும் கூகுள் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

எந்த இடைநிலை சாதனத்தை விட வேகமாக அப்டேட்

எந்த இடைநிலை சாதனத்தை விட வேகமாக அப்டேட்

மென்பொருள் மேம்படுத்தல்கள் அடிப்படையில் எச்எம்டி க்ளோபல் ஆனது ஏற்கனவே நம்பமுடியாத வேலைகளை செய்து வருகிறது, மேலும் இந்த நகர்வானது வேறு எந்த இடைநிலை சாதனத்தை விட வேகமாகவும், தொலைபேசி மென்பொருள் புதுப்பிப்புகளை பெறும் என்பதை உறுதி செய்கிறது. உடன் இந்த தொலைபேசியானது (பெட்டிக்கு வெளியே) ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கொண்டு இயங்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

18: 9 என்கிற காட்சி விகிதம்

18: 9 என்கிற காட்சி விகிதம்

அம்சங்களை பொறுத்தமட்டில் நோக்கியா 7 ப்ளஸ் தான் நிறுவனத்தின் முதல் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட ஸ்மார்ட்போனாக களமிறங்கும். முன்னர் வெளியான புகைப்படங்களும் இதையே உறுதி செய்கின்றன. மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் மூலம் இயக்கப்படுவதாகவும் மற்றும் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டிருக்கும் என்பதையும் அறிய முடிகிறது.

முழு எச்டி ப்ளஸ்+ டிஸ்பிளே

முழு எச்டி ப்ளஸ்+ டிஸ்பிளே

மேலும் கசிந்த விளக்கக்காட்சிகளின் படி, நோக்கியா 7 ப்ளஸ் ஆனது 6 அங்குல, 2160 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட முழு எச்டி ப்ளஸ்+ டிஸ்பிளே கொண்டிருக்கும். மற்றொரு மேம்படுத்தலாக நோக்கியா 7 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட வழக்கமான ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி அல்லாது இக்கருவியில் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி இடம்பெறலாம்.

அட்ரெனோ 512 ஜிபியூ

அட்ரெனோ 512 ஜிபியூ

மேலும் இந்த சிப்செட் அட்ரெனோ 512 ஜிபியூ உடன் இணைக்கப்பட்டுருக்கும். உடன் இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜ் கொண்டுவருமென்பதை வெளிப்படுத்திய லீக்ஸ் ஸ்லைடர்கள் அதன் பேட்டரி திறன் பற்றிய வார்த்தைகளை கொண்டிருக்கவில்லை.

செராமிக் பூச்சுடன் கூடிய உலோகத் தோற்றம்

செராமிக் பூச்சுடன் கூடிய உலோகத் தோற்றம்

மேலும் வெளியாகியுள்ள விளக்கக்காட்சியின் படி, நோக்கியா 7 பிளஸ் ஆனது அதன் பின்புறத்திம் விளிம்புகளில் செராமிக் பூச்சுடன் கூடிய உலோகத் தோற்றத்துடன் உள்ளது. நினைவுகூரும் வண்ணம், நோக்கியா 7 ஆனது கண்ணாடி உடல் வடிவமைப்பு கொண்டு வெளியான நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

மேலுமொரு பிரதான மேம்படுத்தலாக நோக்கியா 7 பிளஸ் ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டு வெளியாகவுள்ளது. இந்த கசிவின் படி, நோக்கியா 7 பிளஸ் ஆனது அதன் பின்புறத்தில் 12எம்பி மற்றும் 13எம்பி ரியர் கேமராக்கள் கொண்டு வருகிறது. இதன் இரண்டாம்நிலை சென்சார் ஆனது ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் போர்ட்ரேட் பயன்முறையை வழங்கும்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
பொத்தீ அம்சம்

பொத்தீ அம்சம்

முன்பக்கத்தை பொறுத்தமட்டில், எப் / 2.0 துளை உடனான ஒரு 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறுகிறது. மேலும் இதன் கேமராக்கள் முன் மற்றும் பின்பக்கத்தை ஒரே நேரத்தில் பதிவு செய்யக்கூடிய கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 (2018)

நோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 (2018)

எச்எம்டி க்ளோபல் நிறுவனம் ஏற்கனவே பிப்ரவரி 25-க்கு அதன் அடுத்த ஸ்மார்ட்போனிற்கான அறிமுக நிகழ்ச்சியை அமைத்துள்ளது. இந்நிகழ்வில் ஃபின்னிஷ் நிறுவனத்தின் நோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8-ன் 2018 பதிப்பு ஆகியவைகளுடன் கூறப்படும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகலாம்.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

மற்றொரு சிறப்பம்சமாக நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டிருக்கும் மற்றும் விரைவில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ புதுப்பிப்பையும் பெறும். மேலும் பல நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மற்றும் வேர்ல்ட் மொபைல் காங்கிரஸ் 2018 நிகழ்வு பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Nokia 7 Plus to Be Part of Android One Program, Nokia 1 Android Go Device Renders Leaked Online. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X