இதுவரை வெளியான எல்லா நோக்கியா கருவிகளையும் விட ஒருபடி மேல்.!

நேற்றுவரை வதந்திக்கப்படும் ஒரு ஸ்மார்ட்போனாக இருந்த நோக்கியா 7 பிளஸ் ஆனது இறுதியாக இன்று நிஜமான ஒரு தயாரிப்பு தான் என்பது உறுதியாகியுள்ளது.

|

நேற்றுவரை வதந்திக்கப்படும் ஒரு ஸ்மார்ட்போனாக இருந்த நோக்கியா 7 பிளஸ் ஆனது இறுதியாக இன்று நிஜமான ஒரு தயாரிப்பு தான் என்பது உறுதியாகியுள்ளது.

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடமிருந்து நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றிய நம்பகமான லீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுவாரசியமாக இது நிகழவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கூறப்படும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் மேலுமொரு அற்புதமான சிறப்பம்சம் உள்ளது.

பிரசென்டேஷன் ஸ்லைடர்

பிரசென்டேஷன் ஸ்லைடர்

அதாவது நோக்கியா 7 ப்ளஸ் தான் நிறுவனத்தின் முதல் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட ஸ்மார்ட்போனாக களமிறங்கும். இந்த தகவலானது சைனீஸ் பைடு மூலம் வெளியாகியுள்ளதென்பதும், வெளியான தகவல்களானது நோக்கியா 7 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் பிரசென்டேஷன் ஸ்லைடர்களின் புகைப்படப்படங்களாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

18: 9 என்கிற காட்சி விகிதம்

18: 9 என்கிற காட்சி விகிதம்

வெளியான புகைப்படங்களின்கீழ், நோக்கியா 7 பிளஸ் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் மூலம் இயக்கப்படுவதாகவும் மற்றும் [பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டிருக்கும் என்பதையும் அறிய முடிகிறது.உடன் ஒரு 18: 9 என்கிற காட்சி விகிதத்தை கொண்டுவரும்.

முழு எச்டி ப்ளஸ்+ டிஸ்பிளே

முழு எச்டி ப்ளஸ்+ டிஸ்பிளே

மேலும் கசிந்த விளக்கக்காட்சிகளின் படி, நோக்கியா 7 ப்ளஸ் ஆனது 6 அங்குல, 2160 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட முழு எச்டி ப்ளஸ்+ டிஸ்பிளே கொண்டிருக்கும். மற்றொரு மேம்படுத்தலாக நோக்கியா 7 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட வழக்கமான ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி அல்லாது இக்கருவியில் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி இடம்பெறலாம்.

அட்ரெனோ 512 ஜிபியூ

அட்ரெனோ 512 ஜிபியூ

மேலும் இந்த சிப்செட் அட்ரெனோ 512 ஜிபியூ உடன் இணைக்கப்பட்டுருக்கும். உடன் இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜ் கொண்டுவருமென்பதை வெளிப்படுத்திய லீக்ஸ் ஸ்லைடர்கள் அதன் பேட்டரி திறன் பற்றிய வார்த்தைகளை கொண்டிருக்கவில்லை.

செராமிக் பூச்சுடன் கூடிய உலோகத் தோற்றம்

செராமிக் பூச்சுடன் கூடிய உலோகத் தோற்றம்

மேலும் வெளியாகியுள்ள விளக்கக்காட்சியின் படி, நோக்கியா 7 பிளஸ் ஆனது அதன் பின்புறத்திம் விளிம்புகளில் செராமிக் பூச்சுடன் கூடிய உலோகத் தோற்றத்துடன் உள்ளது. நினைவுகூரும் வண்ணம், நோக்கியா 7 ஆனது கண்ணாடி உடல் வடிவமைப்பு கொண்டு வெளியான நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

மேலுமொரு பிரதான மேம்படுத்தலாக நோக்கியா 7 பிளஸ் ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டு வெளியாகவுள்ளது. இந்த கசிவின் படி, நோக்கியா 7 பிளஸ் ஆனது அதன் பின்புறத்தில் 12எம்பி மற்றும் 13எம்பி ரியர் கேமராக்கள் கொண்டு வருகிறது. இதன் இரண்டாம்நிலை சென்சார் ஆனது ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் போர்ட்ரேட் பயன்முறையை வழங்கும்.

பொத்தீ அம்சம்

பொத்தீ அம்சம்

முன்பக்கத்தை பொறுத்தமட்டில், எப் / 2.0 துளை உடனான ஒரு 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறுகிறது. மேலும் இதன் கேமராக்கள் முன் மற்றும் பின்பக்கத்தை ஒரே நேரத்தில் பதிவு செய்யக்கூடிய கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 (2018)

நோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 (2018)

எச்எம்டி க்ளோபல் நிறுவனம் ஏற்கனவே பிப்ரவரி 25-க்கு அதன் அடுத்த ஸ்மார்ட்போனிற்கான அறிமுக நிகழ்ச்சியை அமைத்துள்ளது. இந்நிகழ்வில் ஃபின்னிஷ் நிறுவனத்தின் நோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8-ன் 2018 பதிப்பு ஆகியவைகளுடன் கூறப்படும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகலாம்.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

மற்றொரு சிறப்பம்சமாக நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டிருக்கும் மற்றும் விரைவில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ புதுப்பிப்பையும் பெறும். மேலும் பல நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மற்றும் வேர்ல்ட் மொபைல் காங்கிரஸ் 2018 நிகழ்வு பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

ஸ்னாப்டிராகன் 660 & ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் களமிறங்கும் நோக்கியா 7 பிளஸ்.!

ஸ்னாப்டிராகன் 660 & ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் களமிறங்கும் நோக்கியா 7 பிளஸ்.!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நோக்கியா 7 அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, இப்போது வந்துள்ள புதிய தகவலின் அடிப்படையில், பிப்ரவரி மாதம் நடைபெறும் எம்டபள்யுசி 2018-நிகழ்ச்சியில் நோக்கியா 7 பிளஸ் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 660:

ஸ்னாப்டிராகன் 660:

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

இக்கருவி 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு வெளிவரும், அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3300எம்ஏஎச்:

3300எம்ஏஎச்:

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

நோக்கியா 9 மற்றும் நோக்கியா1:

நோக்கியா 9 மற்றும் நோக்கியா1:

பிப்ரவரி மாதம் நடைபெறும் எம்டபள்யுசி 2018-நிகழ்ச்சியில் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 1 போன்ற ஸ்மார்ட்போன்களும்
அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியாவின் ராஜ்ஜியம் ஆரம்பம்: 6ஜிபி-8ஜிபி ரேம்; 5.8 இன்ச் டிஸ்பிளே; 6 கேம்.!

நோக்கியாவின் ராஜ்ஜியம் ஆரம்பம்: 6ஜிபி-8ஜிபி ரேம்; 5.8 இன்ச் டிஸ்பிளே; 6 கேம்.!

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, அடுத்ததாக ஐந்து பின்பக்க கேமராக்கள் (பென்டா-லென்ஸ் கேமரா) கொண்ட கருவி சார்ந்த பணிகளில் ஈடுபடுவதை நாம் நன்கு அறிவோம். அது நோக்கியா 10 ஆக இருக்கலாமென்ற வார்த்தைகளும் உண்டு. அப்படியாக கூறப்படும் நோக்கியா 10 ஆனது கூறப்பட்டது பின்பக்கத்தில் பென்டா-கேமரா அமைப்பை மட்டுமின்றி இன்னும் பல பிரமாதமான வடிவமைப்பு மற்றும் அம்சங்களை பெறும் என்பதை தற்போது வெளியாகியுள்ள லீக்ஸ் புகைப்படமொன்று வெளிப்படுத்தியுள்ளது.

கண்ணாடி பின்புலம்

கண்ணாடி பின்புலம்

வெளியான சமீபத்திய கான்செப்ட் புகைப்படங்களானது நோக்கியா 10 ஒரு கண்ணாடி பின்புலம் கொண்டிருப்பதோடு, ஒரு அழகான 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்கெட்ச் நிஜமானால் எப்படி இருக்கும்.?

ஸ்கெட்ச் நிஜமானால் எப்படி இருக்கும்.?

இதற்கு முன்னர் வெளியான ஒரு லீக்ஸ் தகவலில் கூறப்படும் நோக்கியா 10 ஸ்மார்ட்போனின் கேமரா தொகுதியை காட்சிப்படுத்தும் ஸ்கெட்ச் ஒன்றை கண்டோம். ஆனால் இந்த புகைப்படங்களோ அந்த ஸ்கெட்ச் நிஜமானால் எப்படி இருக்கும் என்ற பார்வையை நமக்கு அளிக்கிறது.

நோக்கியா லூமியா 1020 போன்றதொரு வடிவமைப்பு

நோக்கியா லூமியா 1020 போன்றதொரு வடிவமைப்பு

இது அதிகாரப்பூர்வமான வடிவமைப்பல்ல, கான்செப்ட் (கருத்து) புகைப்படங்கள் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்ட விரும்புகிறோம். புகைப்படங்களின்படி, நோக்கியா 10 ஸ்மார்ட்போனின் கேமரா தொகுதியானது முந்தைய நோக்கியா லூமியா 1020 போன்றதொரு வடிவமைப்பை பெற்றுள்ளது.

ஒரு வட்டமான வடிவமைப்பிற்குள்

ஒரு வட்டமான வடிவமைப்பிற்குள்

இதற்கு நேர்மாறாக வெளியான மற்றொரு அறிக்கையானது நோக்கியா 10 ஆனது அதன் கேமரா சென்சார்களை, இடது பக்கமாக ஒரு எல்இடி பிளாஷ் உடன் செங்குத்தான அமைப்பில் கொண்டிருக்குமென்றும் கூறுகிறது. ஒருவேளை அது கருவியின் முதன்மை சென்சாராக இருக்கலாம், பிற சென்சார்கள் ஒரு வட்டமான வடிவமைப்பிற்குள் ஒருங்கிணைக்கப்படலாம்.

மீண்டுமொரு உலகளாவிய தாக்கம்

மீண்டுமொரு உலகளாவிய தாக்கம்

எல்லாவற்றிற்கும் மேலாக நோக்கியா 10-ன் பென்டா லென்ஸ் அமைப்பானது குவிய நீளத்தை சரி செய்யும் நோக்கத்தின் கீழ் பிரதான சென்சாருடன் இணையும்படி சுழலும் வடிவமைப்பையும் பெறலாம். இவைகள் அனைத்தும் உண்மையானால், நோக்கியா கருவிகள் மீண்டுமொரு உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

18: 9 டிஸ்பிளே

18: 9 டிஸ்பிளே

இதுவரை வெளியான தகவல்களில் இருந்து, நோக்கியா 10 ஆனது ஒரு 5.8 அங்குல 18: 9 டிஸ்பிளே கொண்டிருக்க வேண்டும். நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 7-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்புடன் இணைந்து நிகழப்போகும் எம்டபுள்யூசி 2018 நிகழ்வில் அறிவிக்கப்படலாம்.

Best Mobiles in India

English summary
Leaked Presentation Slides Suggest Nokia 7 Plus as HMD’s First 18:9 Display Smartphone, Launch Set for MWC 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X