Home
Mobile

இந்தியா: ரூ.18,599-விலையில் மிரட்டலான நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்தியாவில் எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையான கேமரா, சிறந்த மென்பொருள் தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளுடன்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 7.2 டிஸ்பிளே

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் எச்டிஆர்10 ஆதரவுடன் இந்த சாதனம்
வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்

அருமையான சிப்செட் வசதி

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா 7.2  கேமரா

நோக்கியா 7.2 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவதுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

நோக்கியா 7.2 சாதனத்தில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், டூயல் சிம், பின்புறம் கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு மற்றும் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,599-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,599-ஆக உள்ளது.
மேலும் எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்டுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5சதவிகிதம் கேஷ்கேப்கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Nokia 7.2 with triple rear cameras launched in India and more details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X