ஓடியாங்க, ஓடியாங்க.. நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! ரூ.6,999-முதல்.!
நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் அனைத்து சிறந்த தரம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவருகிறது. தற்சமயம் இந்நிறுவனத்தின் ஆறு ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,அதைப் பற்றிய முழு விவரங்களைப்
பார்ப்போம்.

நோக்கியா 7.2
நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,599-ஆக இருந்தது, தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.16,749-க்குவிற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா உட்பட மூன்று கேமராக்கள்
பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் வட்ட வடிவிலான கேமரா அமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நோக்கியா 4.2
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,990-ஆக இருந்தது,தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.6,975-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 439எஸ்ஒசி சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

நோக்கியா 6.2
நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.17,699-என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனுக்கு
விலைகுறைக்கப்பட்டு ரூ.13,440-விலையில் கிடைக்கிறது. மேலும் 16எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள்
இவற்றின் பின்புறம் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், எச்டிஆர் 10பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறுஅம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 7.1
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,999-ஆக இருந்தது, தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.11,274-க்குவாங்க கிடைக்கிறது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 636எஸ்ஒசி சிப்செட், 3060எம்ஏஎச் பேட்டரி, டூயல் கேமரா உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களை தவிர்த்து நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது தற்போது பிளிப்கார்ட்டில்ரூ.8, 999-க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.15,999-ஆகும். பின்பு இதேபோல் நோக்கியா 5.1 பிளஸ்ஸ்மார்ட்போனுக்கும் தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
News Source:bgr.in


Click it and Unblock the Notifications