Home
Mobile

IFA 2019: நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 2720ஃபிளிப், நோக்கியா 110(2019) சாதனங்கள் அறிமுகம்

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 7.2, நோக்கியா 6.2,நோக்கியா 2720ஃபிளிப், நோக்கியா 110(2019) சாதனங்களை IFA 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த சாதனங்கள் அனைத்தும் ஐரோப்பா நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு வரும் என்றும், பின்பு விரைவில் இந்திய சந்தைக்கும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நோக்கியா 7.2

நோக்கியா 7.2

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல் திர்மானம்அடிப்படையில் வெளிவந்துள்ளது. பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை கொண்டுளள்து இந்த ஸ்மார்ட்போன் மாடல் குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க
மெமரி இவற்றுள் அடக்கம்.

 மூன்று கேமராக்கள்

நோக்கியா 7.2 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவதுள்ளது. குறிப்பாக 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 6.2

நோக்கியா 6.2

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 2280 x 1080 பிக்சல் திர்மானம்இடம்பெற்றுள்ளது. பின்பு கார்னிங்க கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, எச்டிஆர் ஆதரவு, 4ஜபி ரேம், 64ஜிபி மெமரி,உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

8எம்பி செல்பீ கேமரா

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி
பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம், 3500எம்ஏஎச் பேட்டரி, உள்ளிட்டபல்வேறு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதம் இறுதியில்
இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

நோக்கியா 110(2019):

நோக்கியா 110(2019):

நோக்கியா 110(2019) பீச்சர் போன் ஆனது 1.77-இன்ச் QVGA டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்புநீலம், கருப்பு, பிங்க் போன்ற நிறங்களில் இந்த பீச்சர் போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எம்பி3
பிளேயர், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளது. குறிப்பாக இந்த மாதம் இறுதியில் இந்த சாதனம்விற்பனைக்கு வரும்.

நோக்கியா 2720ஃபிளிப்

நோக்கியா 2720ஃபிளிப்

நோக்கியா 2720ஃபிளிப் சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம், குறிப்பாக இந்த நோக்கியா 2720ஃபிளிப் சாதனம் 2.8-இன்ச் QVGA பிரைமரி டிஸ்பிளே மற்றும் 1.3-இனச் செகன்டரி ஸ்கிரீன் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் குவால்காம் 205 செயலி, 512எம்பி ரேம், 4ஜிபி மெமரி, 1500எம்ஏஎச் பேட்டரி போன்ற வசதிகள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது. பின்பு 2எம்பி ரியர் கேமரா, பேஸ்புக்,வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதம் இறுதியில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.

நோக்கியா 800 Tough

நோக்கியா 800 Tough

நோக்கியா 800 Tough பீச்சர் போன் சாதனம் 2.4-இன்ச் Tough டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்புகுவால்காம் 205 மொபைல் பிளாட்பார்ம், 4ஜிபி ரேம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில்
உள்ளது. குறிப்பாக வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற செயலிகளை இந்த சாதனத்தில் பயன்படுத்த முடியும்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

நோக்கியா 7.2 சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.19,900-ஆக உள்ளது.
நோக்கியா 6.2 சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.15,900-ஆக உள்ளது.
நோக்கியா 110 சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.1400-ஆக உள்ளது.
நோக்கியா 2720ஃபிளிப் சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.7,000-ஆக உள்ளது
நோக்கியா 800 Tough சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.8,700-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 7.2, Nokia 6.2, Nokia 2720 flip, Nokia 110 (2019) and Nokia 8810 Tough Phones Launched at IFA 2019: Price, Specs and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X