ஐ.எஃப்.ஏ 2019 : நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 5.2 அம்சங்கள் வெளியானது.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் அதன் நோக்கியா 7.2, நோக்கியா 6.2,நோக்கியா 5.2 சாதனங்களை ஐ.எஃப்.ஏ 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அனைத்தும் சிறந்த
தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவரும்.

குறிப்பாக நோக்கியா 7.2,நோக்கியா 6.2,நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். பின்பு இந்த சாதனங்கள் அனைத்தும் விரைவில் இந்த சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 7.2
நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.3-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு ஸ்னாப்டிராகன் 710எஸ்ஒசி சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3500எம்ஏஎச் பேட்டரி, ஜிபிஎஸ், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு, நீலம், பசுமை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

நோக்கியா 6.2:
நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 660எஸ்ஒசி சிப்செட் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் ஆனது 5.9-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 720 * 1இ520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் டூயல் ரியர் கேமரா, 3500எம்ஏஎச் பேட்டரி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு ரூ.13,999-விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications