சத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

|

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 9 பியூர் வியூ சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது. அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்மையில் சாம்சங்

அன்மையில் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்ததை தொடர்ந்து நோக்கியா நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு விலைகுறைப்பு என்பதை சற்று விரவாக பார்ப்போம்.

 நோக்கியா 7.2

நோக்கியா 7.2

6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,599-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.17,388-விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 6.3-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பைஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

செயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி?செயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி?

நோக்கியா 7.2 கேமரா

நோக்கியா 7.2 கேமரா

நோக்கியா 7.2 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவதுள்ளது. நோக்கியா 7.2 சாதனத்தில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும்வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், டூயல் சிம், பின்புறம் கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 6.2

நோக்கியா 6.2

4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.15,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,325-க்கு அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

நோக்கியா 6.2  கேமரா

நோக்கியா 6.2 கேமரா

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கள் லென்ஸ் + 5எம்பி டெப்த்சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல ஆதரவுகள் இவற்றுள்அடக்கம். நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் வைஃபை 802.11ac, ப்ளூடூத் 5.0 யூஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ,ஏஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

நோக்கியா 8.1

நோக்கியா 8.1

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080×2244 பிக்சல் திர்மானம் மற்றும் 18:7:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது

நோக்கியா 8.1 கேமரா

நோக்கியா 8.1 கேமரா

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு
வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.!சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.!

நோக்கியா 9 பியூர் வியூ

நோக்கியா 9 பியூர் வியூ

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.49,999-விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560x1440 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. நோக்கியா 9 பியூர் வியூ சாதனம் பொதுவாக 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர் அமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 9 பியூர் வியூ  கேமரா

நோக்கியா 9 பியூர் வியூ கேமரா

12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள் உடன் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் வெளிவருகிறது. பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. நோக்கியா 9 பியூர் வியூஸ்மார்ட்போன் 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Nokia 7.2 6GB RAM, 6.2, 8.1 and Nokia 9 PureView gets Price Cut in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X