ரூ.19,999-/விலையில் மிரட்டலான் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.19,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இருந்தபோதிலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்டபோன் மாடல் வெளிவந்துள்ளது.

ரூ.19,999-/விலையில் மிரட்டலான் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் டிசம்பர் 7-ம் தேதி முதல் தொடங்கும் என்றும், பின்பு ஆன்லைன் ஸ்டோர்களில் முதலில் விற்பனைக்கு வரும் என்றும் எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மேலும் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனுக்கு ஏர்டெல் நிறவனம் சார்பாக டேட்டா ஆஃபர் மற்றும் கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது, அதேபோன்று தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் உடனடி கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இப்போது இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080x2280 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எச்டிஆர்10 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனில் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது, பின்பு
எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். குறிப்பாக கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி

பேட்டரி

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 3060எம்ஏஎச் பேட்டரி மற்றும், பல்வேறு இணைப்பு ஆதரவுகள், 159கிராம் எடை கொண்டுள்ளது, பின்பு விரைவாக சார்ஜ் ஆகும் தன்மை இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 7.1 With Dual Rear Cameras, HDR Display Launched in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X