விலை & விபரக்குறிப்பு: நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் , ட்ரு இயர் பட்ஸ் & ப்ரோ வயர்லெஸ் இயர்போனஸ்.!

நோக்கிய நிறுவனத்தின் புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட் போன் நேற்று லண்டன் இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

|

நோக்கிய நிறுவனத்தின் புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட் போன் நேற்று லண்டன் இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. நோக்கியா நிறுவனத்தின் இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போன் பற்றிய முழு விபரம் மற்றும் அதன் விலை பட்டியல் அனைத்தும் நேற்று நடந்து நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை & விபரக்குறிப்பு: நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் & ஆடியோ அக்சஸரீஸ்.!

நோக்கியா 7.1 ஸ்மார்ட் போன் இன் சிறந்த சிறப்பம்சங்களாக, அதன் 19:9 விகித "பியூர் நாட்ச் டிஸ்பிளே", ஸ்னாப் டிராகன் 636 ப்ராசஸர், யு.எஸ்.பி. டைப்-சி பாஸ்ட் சார்ஜிங், 6000 சீரிஸ் அலுமினியம் பாடி மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் சேவை என பலதரப்பட்ட சேவைகளுடன் இந்த புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 7.1 ஸ்மார்ட் போன்

நோக்கியா 7.1 ஸ்மார்ட் போன்

நோக்கியா 7.1 ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன்படி "ஆண்ட்ராய்டு பை" வெர்ஷன் அப்டேட் நவம்பர் மாதம் நிச்சயம் நோக்கியா 7.1 ஸ்மார்ட் போன்ற்கு வழங்கப்படுமென்று நோக்கியா நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

செக்யூரிட்டி அப்டேட்

செக்யூரிட்டி அப்டேட்

இத்துடன் தொடர்ந்து முதல் மூன்று ஆண்டுகளுக்கு நோக்கியா 7.1 அனைத்து விதமான செக்யூரிட்டி அப்டேட்களையும் இலவசமாக பெரும் என்று நிகழ்ச்சியில் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட்கள் அனைத்தும் மொபைல் வெளியிடப்பட்டு 90 நாட்களுக்குள் பயனர்களுக்கு கிடைக்குமென்று நோக்கியா நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 7.1 சிறப்பம்சங்கள்:

நோக்கியா 7.1 சிறப்பம்சங்கள்:

- 5.8' இன்ச் முழு எச்.டி பிளஸ் 1080x2280 பிக்சல் கொண்ட 19:9 விகித பியூர் நாட்ச் டிஸ்பிளே
- எச்.டி.ஆர் இணக்கத்துடன் கூடிய திரை
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட்
- குவால்காம் ஸ்னாப் டிராகன் 636 ப்ராசஸர்
- 12 மெகா பிக்சல் உடன் கூடிய 5 மெகா பிக்சல் கொண்ட டூயல் கேமரா
- 8 மெகா பிக்சல் முன்பக்க செல்பி கேமரா
- ஸ்டாக் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (ஆண்ட்ராய்டு ஒன்)
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 3060 எம்.ஏ.எச் பேட்டரி
- 18W பாஸ்ட் சார்ஜிங்
- யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
- 4ஜி எல்.டி.இ
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜி.பி.எஸ் மற்றும் ஏ-ஜி.பி.எஸ்
- எம்.எப்.சி
- 3.5 ஆடியோ ஹெட்போன் ஜாக்

விலை : ரூ.27,000
நிறம்: க்ளோஸ் மிட்நைட் ப்ளூ மற்றும் க்ளோஸ் ஸ்டீல்

ஆடியோ அக்சஸரீஸ்

ஆடியோ அக்சஸரீஸ்

இந்த அறிமுக நிகழ்ச்சியின் பொது, நோக்கியா நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட் போன் உடன் நோக்கியா ட்ரு இயர் பட்ஸ் மற்றும் நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போனஸ் என்ற இரண்டு புதிய ஆடியோ அக்சஸரீஸ்ஸை அறிமுகம் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 7.1 With 19:9 PureDisplay, Dual Cameras, Snapdragon 636 Launched: Price, Specifications, Features : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X