பிளிப்கார்ட்: நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.
பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா.காம் வலைதளங்களில் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.900-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.19,099-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080x2280 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எச்டிஆர்10 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனில் 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். குறிப்பாக கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி :
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 3400எம்ஏஎச் பேட்டரி மற்றும், பல்வேறு இணைப்பு ஆதரவுகள், 159கிராம் எடை கொண்டுள்ளது, பின்பு விரைவாக சார்ஜ் ஆகும் தன்மை இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications