மிரட்டும் நோக்கியா.. 200MP கேமரா.. 12GB ரேம்.. 6900mAh பேட்டரி.. 65W குயிக் சார்ஜிங்.. எந்த மாடல்?
டிஎஸ்எல்ஆர் கேமராக்களுக்கு நிகராக ஹாசல்பிளாட் கார்ல் ஜெய்ஸ் லென்ஸ் கொண்ட 200எம்பி கேமரா மட்டுமல்லாமல், 12ஜிபி ரேம், 6900mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் என்று மிகப்பெரும் அம்சங்களுடன் நோக்கியா 6600 5ஜி (Nokia 6600 5G) போன் களமிறங்குகிறது.
ஒட்டுமொத்த மார்கெட்டே அதிரும்படி நோக்கியா 6600 போன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நோக்கியாவின் 6600 மாடல் போனை இன்றளவும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் அனைவரது கனவு போனாக இந்த நோக்கியாவின் 6600 மாடல் இருந்தது. ஏனென்றால், 2003ஆம் ஆண்டுவாக்கில் வித்தியாசமான டிசைனுக்காகவே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட போன் இதுவாகும்.

அதன்பின்பு, 2008ஆம் ஆண்டில் இருந்து ஆண்ட்ராய்டு போன்களின் வருகையில், இந்த போனின் பயன்பாடு குறைந்துவிட்டது. ஆனால், இப்போது, முழு கீபோர்ட்டையும் தூக்கிவிட்டு அமோலெட் டிஸ்பிளே, 5ஜி சப்போர்ட், 200 எம்பி கேமரா, 6900mAh பேட்டரி என்று பிரம்மாண்டமாக மீண்டும் வரவிருக்கிறது. இந்த போனின் அம்சங்கள் பலமுறை கசிந்துள்ளன. ஆனால், நோக்கியா நிறுவனத்தால் உறுதி செய்யப்படவில்லை.
இந்த சூழலில் நோக்கியா நிறுவனமே நோக்கியா 6600 போனை மீண்டும் மார்கெட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நேரத்தில் நோக்கியா 6600 5 ஜி போனின் கசிந்துள்ள அம்சங்கள் என்ன? அதன் விலை எவ்வளவு இருக்கும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
நோக்கியா 6600 5ஜி அம்சங்கள் (Nokia 6600 5G Specifications): இந்த நோக்கியா போன், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் கொண்டிருக்கிறது.
காங்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass ) பாதுகாப்பு கொண்ட 4.2 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என்று 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனில் மிகப்பெரும் அம்சமாக 200 எம்பி கேமரா மெயின் கேமரா மற்றும் 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவுக்கு ஹாசல்பிளாட் கார்ல் ஜெய்ஸ் லென்ஸ் (Hasselblad Carl Zeiss Lens) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் 65W குயிக் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6900mAh பேட்டரி கொண்டிருக்கிறது.
மேலும், டூயல் நானோ சிம் போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜேக், பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், பேஸ் அன்லாக், IP69 தர வாட்டர் ரெசிஸ்டென்ட் உள்ளிட்ட முக்கிய அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.35 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.
இதுவெறும் போனாக மட்டுமல்லாமல், டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு நிகரான போட்டோக்களை எடுக்கக்கூடிய வகையில், சிறந்த கேமராவாகவும் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








