கைக்கு அடக்கமா க்யூட்டா 4ஜி அம்சத்தோடு நோக்கியா 6300: விலை ரொம்ப குறைவு!
கடந்தாண்டு நவம்பர் மாதம் ஐரோப்பாவில் நோக்கியா 6300 4ஜி அம்ச சாதனத்தை நோக்கியா 8000 4ஜி உடன் எச்எம்டி குளோபல் அறிவித்தது. அதேபோல் இந்த சாதனம் அமெரிக்காவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அமெரிக்காவில் நோக்கியா 6300 4ஜி சாதனத்தின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.5,100 ஆக இருக்கிறது. இது சார்கோல், சியான் க்ரீன், வெள்ளை ஆகிய வண்ண விருப்பத்தில் கிடைக்கும். நோக்கியா 6300 4ஜி சாதனம் இந்தியாவிலும் பிற சந்தைகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சாதனம் ரூ.5000-த்துக்கு கீழ் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் நோக்கியா 5310, நோக்கியா 215 4ஜி ரூ.4000-த்துக்கு கீழ் கிடைக்கின்றன. நோக்கியா 6300 4ஜி விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில் இது 2.4 இன்ச் க்யூவிஜிஏ ஐபிஏ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 செயலி மூலம் இயக்கப்படும் எனவும் 512 எம்பி ரேம், 4ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது.
32ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. இதில் 1500 எம்ஏஎச் பேட்டரி, மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவை உள்ளன. கூகுள் அசிஸ்டெண்ட், யூடியூப், வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் கைஸ்டோரில் நூற்றுக்கணக்கான பயன்பாடுகள் இதில் அணுகக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications