நோக்கியா 6.2 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்ல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?

|

எச்.எம்.டி. குளோபல் நோக்கியா நிறுவனம், வரும் 6 ஆம் தேதி இந்தியா மற்றும் இத்தாலியில் நடைபெறவுள்ள அதன் நிகழ்ச்சியில், புதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.

நோக்கியா 9 பியூர் வியூ மற்றும் நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த நிகழ்ச்சியின் பொது அறிமுகம் செய்யப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

நோக்கியா நிறுவனம் கடந்த ஆண்டு நோக்கியா 6.1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தைக்கு அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பட்டியலின் கீழ் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் இன் விலை ரூ.16,999 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா: போகோ எப்2 முதல் கேலக்ஸி ஏ80 வரை இந்த மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!இந்தியா: போகோ எப்2 முதல் கேலக்ஸி ஏ80 வரை இந்த மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

நோக்கியா 6.2 இல் என்ன புதுமை இருக்கிறது

நோக்கியா 6.2 இல் என்ன புதுமை இருக்கிறது

இதனைத் தொடர்ந்த தற்பொழுது நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பட்டியலின் கீழ் புதிய இரண்டு நிறத்தில், ஜூம்மிங் சேவை மற்றும் நைட் மோடு சேவைகளுடன் அறிமுகம் செய்யப்படுமென்று நோக்கியா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளது.

புதிய நோக்கியா 6.2 விலை என்ன தெரியுமா?

புதிய நோக்கியா 6.2 விலை என்ன தெரியுமா?

இந்தியச் சந்தையில், புதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.20,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் தைவானில் நோக்கியா நிறுவனம் நோக்கியா எக்ஸ்71 என்ற பெயரில், நோக்கியா 6.2 மாடலை ரூ.20,000 அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

10 வழிகளில் உங்களுடைய ஸ்மார்ட்போன் உங்களைக் கொல்லக் கூடும்.! நம்பிக்கை இல்லையா இதை படிங்க.!10 வழிகளில் உங்களுடைய ஸ்மார்ட்போன் உங்களைக் கொல்லக் கூடும்.! நம்பிக்கை இல்லையா இதை படிங்க.!

நோக்கியா எக்ஸ்71 சிறப்பம்சம்:

நோக்கியா எக்ஸ்71 சிறப்பம்சம்:

- 6.4 இன்ச் எப்.எச்.டி பன்ச் ஹோல் டிஸ்பிளே

- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம்
- 48 மெகா பிக்சல் பின்பக்க பிரைமரி கேமரா
- 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா
- 5 மெகா பிக்சல் கேமரா
- 16 மெகா பிக்சல் முன்பக்க செலஃபீ கேமரா
- 18W பாஸ்ட் சார்ஜிங்
- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 3500 எம்.ஏ.எச் பேட்டரி

பட்ஜெட் விலையில் சூப்பர் டீல்

பட்ஜெட் விலையில் சூப்பர் டீல்

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பட்டியலில் வெறும் ரூ.20,000திற்குள் ட்ரிபிள் கேமரா, பன்ச் ஹோல் டிஸ்பிளே, பாஸ்ட் சார்ஜிங் , 6ஜிபி ரேம் என்பது தான் இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் சிறப்பு. குறைந்த விலையில் ஒரு சூப்பர் டீல் இந்த நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமே இல்லை.

Best Mobiles in India

English summary
Check This Nokia 6.2 Smartphone Which Is Going To Launch On June 6th In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X