Home
Mobile

என்எஃப்சி தொழில் நுட்பத்தில் ஈர்க்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்!

By Super

என்எஃப்சி தொழில் நுட்பத்தில் ஈர்க்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்!
சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் நோக்கியா நிறுவனத்திடம் இருந்து அடு்த்து என்ன மொபைல் வெளியாகும் என்று அனைவரிடமும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பினை குறைக்காமல், நோக்கியாவும் 610 என்எஃப்சி என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ் போன் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த இயங்குதளம் சிறப்பாக இயங்க இதற்கு 800 மெகாஹெர்ட்ஸ் கோர் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் 3.70 இஞ்ச் டிஎப்டி தொடுதிரையினை கொண்டது. 135 கிராம் இலகு எடை கொண்ட ஸ்மார்ட்போனின் கவர்ச்சிகரமான வடிவமைப்பு நிச்சயம் எல்லோரையும் ஈர்க்கும்.

கண்களை கவரும் காட்சிகளை கேமராவிலும் அழகாக பதிவு செய்ய இதில் ஃபிளாஷ் மற்றும் ஆட்டோஃபோக்கஸ் தொழில் நுட்ப வசதியினை வழங்கும் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெற முடியும்.

இதன் மூலம் 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்கும். ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பத்தின் மூலம் பிரவுசிங் வசதியினை மட்டும் அல்லாமல் 3ஜி நெட்வொர்க் வசதியினையும் சேர்த்து வழங்கும்.

ஆற்றல் வாய்ந்த 1,300 எம்ஏஎச் ஸ்டான்டர்டு எல்ஐ அயான் பேட்டரி இருப்பதால், 2ஜி வசதிக்கு 10 மணி நேரம் 50 நிமிடம் டாக் டைம் வசதியினையும், 670 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியினையும் கொடுக்கும். 3ஜி நெட்வொர்க் வசதிக்கு 720 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 9 மணி நேரம் 50 நிமிடம் டாக் டைம் வசதியினையும் வழங்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் பெயரிலேயே என்எஃப்சி என்று இருக்கையில், என்எஃப்சி தொழில் நுட்பம் இல்லாமல் இருக்குமா? ஆம்! இந்த ஸ்மார்ட்போன் என்எஃப்சி தொழில் நுட்பத்திற்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். இத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய இந்த நோக்கியா 610 என்எப்சி ஸ்மார்ட்போன் ரூ.12,000 ஒட்டிய விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X