Home
Mobile

நோக்கியா லுமியா ஸ்மார்ட்போன்கள் ஓர் சிறிய ஒப்பீடு!

By Super

நோக்கியா லுமியா ஸ்மார்ட்போன்கள் ஓர் சிறிய ஒப்பீடு!
நோக்கியா நிறுவனத்தின் ஸமார்ட்போன்களில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்ற ஸ்மார்ட்போன் லுமியா சிரீஸ் ஸ்மார்ட்போன்கள். இங்கே லுமியா-610 மற்றும் லுமியா-710 ஸ்மார்ட்போன்கள் பற்றி சிறிய ஒப்பீட்டு.

இந்த 2 ஸ்மார்ட்போன்களிலுமே 3.7 இஞ்ச் அகன்ற திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தகவல்களாக இருந்தாலும், புகைப்படமாக இருந்தாலும் அதை தெளிவாக பார்க்க முடியும். இந்த ஸ்மார்ட்போன்களின் திரையில் டிஎப்டி திரை தொழில் நுட்பத்தினையும் பெற முடியும்.

எந்த ஸ்மார்ட்போனாக இருப்பினும் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் லுமியா-710 மற்றும் லுமியா-610 ஸ்மார்ட்போன்கள் விண்டோஸ் போன் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

ஆனால் பிராசஸரை பொருத்த வரையில் நோக்கியா லுமியா-610 ஸ்மார்ட்போனில் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரையும், லுமியா-610 ஸ்மார்ட்போனில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்கார்பியன் பிராசஸரை வழங்கும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது என்று சொல்லலாம். லுமியா-610, லுமியா-710 ஸ்மார்ட்போன்களில் 5 மெகா பிக்ஸல் கேமராவினை பெற முடியும்.

ஆனால் இந்த ஸ்மார்ட்போன்களில் முகப்பு கேமரா இல்லை என்றாலும், இதன் 5 மெகா பிக்ஸல் கேமராவிலேயே தேவையான துல்லியம் கொண்ட புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசியினையும் பெறலாம்.

அற்புதமான ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர் வசதியினையும் பயன்படுத்தி கொள்ள முடியும். 2ஜி, 3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இநத் ஸ்மார்ட்போன்களில் அதற்கு தகுந்த வகையில் நீடித்து உழைக்கும் எல்ஐ-அயான் 1,300 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

நோக்கியா லுமியா-610 ஸ்மார்ட்போனை ரூ.12,000 விலையிலும், நோக்கியா லுமியா-710 ஸ்மார்ட்போனை ரூ.19,000 விலையிலும் பெற முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X