பட்ஜெட் விலையில் களமிறங்கும் 6ஜபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்.!
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
MWC 2019 நிகழ்ச்சியில் எச்எம்டி குளோபல் நிறுவனம் 6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

6ஜபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை ரூ.18,499-விலையில் வாங்க முடியும், பின்பு ஏர்டெல் நிறுவனம் சார்பில் டேட்டா சலுகை மற்றும் ரூ.2000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 6.1 பிளஸ்:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள் -பேட்டரி
இந்த நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications