புதிய சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய நோக்கியா போன்

By Super
|
புதிய சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய நோக்கியா போன்
மொபைல் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்த நோக்கியா நிறுவனம் தொடர்ந்து தனது சாதனையை நிலை நாட்டிக் கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் புதியதொரு படைப்பை உருவாக்கியிருக்கிறது நோக்கியா நிறுவனம். நோக்கியா- 603 என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்ய இருக்கிறது நோக்கியா நிறுவனம்.

இந்த மொபைல் சிம்பையான் பெல் என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு புதிய ஆர்வத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 603 நோக்கியா மொபைல் தொடுதிரை வசதி கொண்டது.

இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் சிபியூ பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 360 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தைக் கொண்டுள்ளது. அசத்தலான புகைப்படத்தையும், வீடியோவையும் கொடுக்கும் 5 மெகா பிக்ஸல் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. தகவல்களை நண்பர்களுடன் பரிமாற்றிக் கொள்ள புளூடூத் வசதியும் உள்ளது. இதில் உள்ள வைபை வசதியின் மூலம் நெட்வொர்க் தொடர்பை எளிதாகப்பெற முடியும்.

3.5 மிமீ ஆடியோ ஜேக் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. மைக்ரோசிம் கார்ட் வசதியுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 603 மொபைல் யூஎஸ்பி வசதியையும் கொண்டுள்ளது. இதனால் நீங்கள் விரும்பியதை கணினியில் இருந்து மொபைலுக்கு எளிதாகப் பரிமாற்றம் செய்யலாம். இத்தனை வசதி கொண்ட இந்த நோக்கியா ஸ்மார்ட்மொபைல் ரூ.15,000 விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X