Home
Mobile

நோக்கியா 6 (4ஜிபி) இந்திய அறிமுகம்: நம்பி வாங்குவது புத்திசாலித்தனமல்ல ஏன்.?

இந்த அமைதியான நடவடிக்கையின் கீழ் வெளியான நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாறுபாட்டின் இந்திய விலை நிர்ணயம் என்ன.? மற்றும் அதன் அம்சங்கள் என்னென்ன.?

By Muthuraj

வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதியன்று நோக்கியா நிறுவனத்தின் நோக்கிய 1 மற்றும் நோக்கியா 7 ப்ளஸ் ஆகிய கருவிகள் அறிமுகமாகவுள்ளதால் அனைவரின் எதிர்பார்ப்பும் அதன் மீதே இருக்க வேண்டுமென்பதால் நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது அதன் நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மாறுபாட்டை இந்திய சந்தையில் சத்தமின்றி விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

நோக்கியா 6 (4ஜிபி) இந்திய அறிமுகம்: வாங்குவது புத்திசாலித்தனமல்ல.!

இந்த அமைதியான நடவடிக்கையின் கீழ் வெளியான நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாறுபாட்டின் இந்திய விலை நிர்ணயம் என்ன.? மற்றும் அதன் அம்சங்கள் என்னென்ன.? என்பதை விரிவாக காண்போம்.

பிப்ரவரி 20 தொடங்கி விற்பனைக்கு வரும்

பிப்ரவரி 20 தொடங்கி விற்பனைக்கு வரும்

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்டில் ரூ.16,999/-க்கு பட்டியலிடப்பட்டுள்ள நோக்கியா 6 (4ஜிபி ரேம்) ஆனது வருகிற பிப்ரவரி 20 தொடங்கி விற்பனைக்கு வரும். ஆனால் துரதிருஷ்டவசமாக, நோக்கியா 6-ன் ஆர்ட் பிளாக் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகமாகவில்லை.

அமேசான் இந்தியா மற்றும் சில்லறை விற்பனை கடை

அமேசான் இந்தியா மற்றும் சில்லறை விற்பனை கடை

அது வெளியாகியிருந்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மீ நோட் 5 மற்றும் குநோட் 5 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு சற்று போட்டியை வழங்கியிருக்கும். இதற்கு முன்பு வரையிலாக, நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மாறுபாடானது மட்டுமே அமேசான் இந்தியா மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.14,999/-க்கு விற்பனையானது.

திறன்மிக்க அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு

திறன்மிக்க அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு

இருப்பினும் கூட நோக்கியா 6 ஆனது அம்சங்கள் கொண்டு ரெட்மீ நோட் 5 ப்ரோ உடன் போட்டியிடவே முடியாது என்பதே நிதர்சனம். ஏனெனில் நோட் 5 ப்ரோ ஆனது திறன்மிக்க அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு கொண்டுள்ளது, குறிப்பாக சமீபத்திய ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஓஎஸ் கொண்டுள்ளது.

நோக்கியா 6

நோக்கியா 6

மேலும், நோக்கியா 6-ன் புதிய 4 ஜிபி ரேம் மாறுபாடு ப்ளிப்ஜார்ட் வலைதளத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அம்சங்களை பொறுத்தமட்டில், நோக்கியா 6 ஆனது டாங்கி (Tank) மாதிரியான உடல் வடிவமைப்பை பெற்றுள்ளது

430 எஸ்ஓசி சிப்செட்

430 எஸ்ஓசி சிப்செட்

மற்றும் ஒரு 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஒரு பெரிய ஏமாற்றமாக நோக்கியா 6 ஆனது ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

16எம்பி முதன்மை +  8எம்பி செல்பீ

16எம்பி முதன்மை + 8எம்பி செல்பீ

இப்போது, இந்த ​​தொலைபேசியானது 3 ஜிபி / 4 ஜிபி மற்றும் முறையே 32ஜிபி / 64ஜிபி சேமிப்பு கொண்ட இரண்டு சேமிப்பு விருப்பங்களில் வருகிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 16எம்பி முதன்மை பின்பக்க கேமரா மற்றும் ஒரு 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

ஊக்குவிப்பதிற்கு இல்லை.!

ஊக்குவிப்பதிற்கு இல்லை.!

ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓரியோ பதிப்பில் இயங்கும் இக்கருவி ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. மொத்தத்தில், நோக்கியா 6 ஆனது வாங்குவதற்கு ஊக்குவிப்பதிற்கு இல்லை.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
விலைப்புள்ளி.!

விலைப்புள்ளி.!

ஏனெனில் வரவிருக்கும் நோக்கியா 6 (2018) மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஆனது முறையே ரூ.20,000/- மற்றும் ரூ.25,000/- என்கிற விலைப்புள்ளியை எட்டலாம் என்பதால் அதனுடே செல்வது புத்திசாலித்தனம். குறிப்பாக நோக்கியா 7 பிளஸ் ஆனது ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி கொண்டு இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல ஸ்மார்ட்போன்ககள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Nokia 6 With 4GB of RAM and 64GB of Internal Storage Launched in India for Rs 16,999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X