Home
Mobile

ஜூன் 13 வெளியீடு : வெளியானது நோக்கியா ஆண்ட்ராய்டு விலை விவரங்கள்.!

நோக்கியா பவர் யுசர் அறிக்கையின்படி, எச்எம்டி நிறுவனம் நாட்டில் உள்ள இதர கருவிகளுடன் போட்டியிடும் வகையில் விலையை நிர்ணயிக்கும் என்று கூறுகிறது.

By Muthuraj

இந்தியாவில் ஜூன் 13-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்வில் நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் எச்எம்டி நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதன் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களான - நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 வெளியிடப்பட உள்ளது.

ஜூன் 13 வெளியீடு : வெளியானது நோக்கியா ஆண்ட்ராய்டு விலை விவரங்கள்.!

தற்போதைய விவரங்களின்படி இந்தியாவில் நோக்கியா தொலைபேசிகளை வெளியிட்ட ஒரு வாரம் கழித்து, இந்த ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் என்ற ஒரு யோசனை கிடைக்கும். நோக்கியா பவர் யுசர் அறிக்கையின்படி, எச்எம்டி நிறுவனம் நாட்டில் உள்ள இதர கருவிகளுடன் போட்டியிடும் வகையில் விலையை நிர்ணயிக்கும் என்று கூறுகிறது.

ஜூன் 13 வெளியீடு : வெளியானது நோக்கியா ஆண்ட்ராய்டு விலை விவரங்கள்.!

நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மிட்-ரேன்ஜ் வகை விலையில் விலைக்கு விற்கப்படக்கூடும் என்றும், வாங்குபவர்களுக்கு அவை மலிவு விலையை அளிப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. இந்த தகவலின் படி, நோக்கியா 3 விலை ரூ.9,000/- என்றும் மற்றும் நோக்கியா 5 ரூ.12,000/- என்றும், நோக்கியா 6 ஆனது ரூ.15,000 அல்லது ரூ. 16,000/-க்குள் என்ற விலை நிர்ணயங்களை பெறலாம். இந்த விலை விவரங்கள் ஐரோப்பிய சந்தையின் விலைகளுடன் ஒப்பிடும் போது மிக அருமையான நிர்ணயமாக தெரிகிறது.

நோக்கியா 6 ஆனது 5.5 அங்குல முழு எச்டி 1080பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8எம்பி செல்பீ கேமரா, 16எம்பி ரியர் கேமரா, கைரேகை சென்சார், 4ஜி எல்டிஇ, 3000எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

ஜூன் 13 வெளியீடு : வெளியானது நோக்கியா ஆண்ட்ராய்டு விலை விவரங்கள்.!

நோக்கியா 5 ஆனது 5.2 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 13எம்பி பின்புற கேமரா, 4ஜி எல்டிஇ, 3000எம்ஏஎச், ஓடிஜி ஆதரவு ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

நோக்கியா 3 ஆனது 5 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8எம்பி ரியர் கிம், 8எமி செல்பீ கேம், ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட், ஓ.டி.ஜி. ஆதரவு, 4ஜி எல்டிஇ, 2650எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 6, Nokia 5, Nokia 3 price details are out ahead of June 13 release. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X