நோக்கியா 6,5 மற்றும் 3 : அதிகாரப்பூர்வ இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் அழைப்பிதழில் சாதனங்களைப் பற்றி குறிப்பிடாமல் "நோக்கியா ஸ்மார்ட்போன்களின் புதிய சகாப்தத்தை வரவேற்கிறேன்" என்று மட்டுமே கூறுகிறது.

|

நோக்கியா பிராண்ட் கருவிகளை உற்பத்தி செய்யும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் ஜூன் மாதம் 13-ஆம் தேதி நடத்தும் நிகழ்வொன்றில் அதன் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்படுமென நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

நோக்கியா 6,5 & 3 : அதிகாரப்பூர்வ இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

இதன் மூலம் நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன்கள் இறுதியாக அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்பது உறுதியாகிவிட்டது. எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் அழைப்பிதழில் சாதனங்களைப் பற்றி குறிப்பிடாமல் "நோக்கியா ஸ்மார்ட்போன்களின் புதிய சகாப்தத்தை வரவேற்கிறேன்" என்று மட்டுமே கூறுகிறது. நினைவூட்டும் வண்ணம் புதிய நோக்கியா 3310 இந்தியாவில் மே மாத நடுப்பகுதியில் ரூ.3,310/-க்கு ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 6,5 & 3 : அதிகாரப்பூர்வ இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மிட்-ரேன்ஜ் வகை விலையில் விலைக்கு விற்கப்படக்கூடும் என்றும், வாங்குபவர்களுக்கு அவை மலிவு விலையை அளிப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. இந்த தகவலின் படி, நோக்கியா 3 விலை ரூ.9,000/- என்றும் மற்றும் நோக்கியா 5 ரூ.12,000/- என்றும், நோக்கியா 6 ஆனது ரூ.15,000 அல்லது ரூ. 16,000/-க்குள் என்ற விலை நிர்ணயங்களை பெறலாம். இந்த விலை விவரங்கள் ஐரோப்பிய சந்தையின் விலைகளுடன் ஒப்பிடும் போது மிக அருமையான நிர்ணயமாக தெரிகிறது.

நோக்கியா 6,5 & 3 : அதிகாரப்பூர்வ இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

நோக்கியா 6 ஆனது 5.5 அங்குல முழு எச்டி 1080பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8எம்பி செல்பீ கேமரா, 16எம்பி ரியர் கேமரா, கைரேகை சென்சார், 4ஜி எல்டிஇ, 3000எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

நோக்கியா 5 ஆனது 5.2 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 13எம்பி பின்புற கேமரா, 4ஜி எல்டிஇ, 3000எம்ஏஎச், ஓடிஜி ஆதரவு ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

நோக்கியா 6,5 & 3 : அதிகாரப்பூர்வ இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

நோக்கியா 3 ஆனது 5 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8எம்பி ரியர் கிம், 8எமி செல்பீ கேம், ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட், ஓ.டி.ஜி. ஆதரவு, 4ஜி எல்டிஇ, 2650எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 6, Nokia 5, Nokia 3 price details are out ahead of June 13 release. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X