நோக்கியா 6 ஜூலை மாதம் விற்ப்பனை தொடங்குகிறது.!
நோக்கியா 6 : 3ஜிபி ரேம்,32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது.!
அனைத்து நாட்டு மக்களும் எதர்பார்த்த நோக்கியா 6 ஸ்மார்ட்போன் வருகின்ற ஜூலை மாதம் விற்ப்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் பல்வேறு மென்பொருள் மேம்பாடுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் தான் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மொபைல் சந்தையில் பல எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் (1080-1920) வீடியோ பிக்சல் இடம்பெற்றுள்ளது

கேமரா:
நோக்கியா 6 பின்புற கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 3ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 64ஜிபி வரை மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாப்ட்வேர்:
நோக்கியா 6 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 435 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ , யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
நோக்கியா 6 பொருத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications