நோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
2017-ம் ஆண்டு நோக்கியா 6 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.14,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது, அதன்பின்பு விலைகுறைக்கப்பட்டு ரூ.13,499-க்கு விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் வரும் ஏப்ரல் 4-ம் தேதி நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 6(2018) போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு நோக்கியா 6 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.14,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது, அதன்பின்பு விலைகுறைக்கப்பட்டு ரூ.13,499-க்கு
விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி நோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு
விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் வலைதளம் மூலம்
வாங்க முடியும்.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயங்கும் இக்கருவி 2.5டி கொரில்லா கண்ணாடி கொண்டு மூடப்பட்டிருக்கும் ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே
கொண்டுள்ளது.
ஒரு நீக்கமுடியாத 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இக்கருவி ஒரு இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். 6000 தொடர்
அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யூனிபாடி நோக்கியா 6 கருவியின் ஹோம் பட்டனில் ஒரு பதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.

ஆட்டோ ஃபோகஸ் மற்றும் இரட்டை-டோன் ஃபிளாஷ், எப்/2.0 கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமிரா அத்துடன் எப்/2.0 கொண்ட செல்பீகளுக்கான 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டுள்ளத்து. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான ஒலிக்கான டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் மற்றும் 'டூவல் ஸ்பீக்கர்ஸ்' கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தமட்டில் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 430எஸ்ஒசி செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயங்குகிறது,
அதன்பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32 ரோம் கொண்டுள்ளது நோக்கியா 6 .

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள்
இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications