Home
Mobile

பிரீமியம் விலையில் இந்தியாவில் கிடைக்கும் நோக்கியா 6.!

இந்த மிட்-ரேன்ஜ் கருவியானது ஒரு சூடான பலகாரம் போல சீனாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

By Muthuraj

ஸ்மார்ட்போன் சந்தையை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய கிளம்பியுள்ள நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் நோக்கியா 6 கருவியானது சீனாவில் மற்றும் ஜேடி.காம் வலைத்தளத்தில் பிரத்தியேக அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த மிட்-ரேன்ஜ் கருவியானது ஒரு சூடான பலகாரம் போல சீனாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக, நோக்கியா 6 கருவியானது மற்ற எந்த நாட்டு சந்தைகளிலும் கிடைக்கவில்லை என்பது ஒருபக்கமிருக்க ஒரு சில பிற நாடுகளில் உத்தியோகபூர்வமற்ற பட்டியல்லில் நோக்கியா 6 கருவி கிடைக்கின்றன, இந்தியா உட்பட.!

அதிகாரப்பூர்வமற்ற முறை

அதிகாரப்பூர்வமற்ற முறை

சமீபத்தில், இந்த நோக்கியா கருவியானது பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பட்டியலிடப்பட்டது. இப்போது இந்த சாதனம் ஏனைய சில நாடுகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

ஈபே இந்தியா

ஈபே இந்தியா

இந்தியாவை பொறுத்தமட்டில் அதிகாரபூர்வமற்ற பட்டியல் என்பதால் இந்த நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஒரு பிரீமியம் விலை டேக் உடன் ஈபே இந்தியா வலைத்தளத்தில் கிடைக்கிறது.

விலை

விலை

இந்தியாவில் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.32,440/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது. அதன் உத்தியோகபூர்வ விலையானதுரூ.16,000/- என்ற நிர்ணயத்தை சுற்றி இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஷிப்ப்பிங்

ஷிப்ப்பிங்

ஈபே வலைத்தளத்தில் கிட்டத்தட்ட இரு மடங்கு விலையில் நோக்கியா 6 கருவி கிடைக்கிறது மற்றும் 20 முதல் 25 நாட்களில் ஷிப்ப்பிங் செய்யப்படும் என்று வலைத்தளம் குறிப்பிட்டுள்ளதை காணமுடிகிறது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயங்கும் இக்கருவி 2.5டி கொரில்லா கண்ணாடி கொண்டு மூடப்பட்டிருக்கும் ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம்

உடன் இந்த நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்புடன் இணைந்து க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

3000எம்ஏஎச் பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி

ஒரு நீக்கமுடியாத 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இக்கருவி ஒரு இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். 6000 தொடர் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யூனிபாடி நோக்கியா 6 கருவியின் ஹோம் பட்டனில் ஒரு பதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.

கேமிரா

கேமிரா

ஆட்டோ ஃபோகஸ் மற்றும் இரட்டை-டோன் ஃபிளாஷ், எப்/2.0 கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமிரா அத்துடன் எப்/2.0 கொண்ட செல்பீகளுக்கான 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டுள்ளத்து. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான ஒலிக்கான டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் மற்றும் 'டூவல் ஸ்பீக்கர்ஸ்' கொண்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா கருவிகளை கண்டு ஆப்பிள் 'மிரண்டுவிட்டது' போலும்.!

Best Mobiles in India

English summary
Nokia 6 available in India at a premium price tag. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X