Home
Mobile

நோக்கியா 6 (2018) அறிமுகம்: பெரிய ஏமாற்றம் மற்றும் பெரிய மேம்படுத்தல்.!

நோக்கியா அதன் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ள நிலைப்பாட்டில் வெளியாகியுள்ள இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் ஒரு நல்ல வியாபார சைகையாகவே தெரிகிறது.

By Muthuraj

இந்த 2018-ஆம் ஆண்டின் முதல் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 6 (2018) கருவியை எச்எம்டி க்ளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மற்றும் இந்த நோக்கியா 6 (2018) ஆனத்தூபி கடந்த ஆண்டு வெளியான நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் ஒரு மேம்பட்ட பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 6 (2018) அறிமுகம்: பெரிய ஏமாற்றம் மற்றும் பெரிய மேம்படுத்தல்.

அசல் நோக்கியா 6 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது செயலி, சற்று மாற்றப்பட்ட வடிவமைப்பு மற்றும் யூஎஸ்பி டைப் -சி போர்ட் ஆகியவற்றை இக்கருவி தன்னுள் இணைக்கப்பெற்றுள்ளது. சீனாவில் அறிமுகப்படுத்தபட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த இரண்டு மாதங்களுக்கு சீன சந்தைகளில் மட்டும் தான் கிடைக்கும் என்பது போல தெரிகிறது.

ஒரு நல்ல வியாபார சைகை

ஒரு நல்ல வியாபார சைகை

இக்கருவியின் உலகளாவிய சந்தைகளுக்கான பதிப்பானது நடக்கவிருக்கும் எம்டபுள்யூசி 2018 நிகழ்வில் எச்எம்டி க்ளோபல் நிறுவனம் மூலம் அறிவிக்கபட வாய்ப்புள்ளது. நோக்கியா அதன் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ள நிலைப்பாட்டில் வெளியாகியுள்ள இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் ஒரு நல்ல வியாபார சைகையாகவே தெரிகிறது.

4 ஜிபி ரேம்

4 ஜிபி ரேம்

நோக்கியா 6 (2018) கேட்கும் விலைக்கு ஏற்ற போட்டியிடும் வன்பொருள் பொதிகளை கொண்டுள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு மாதிரியானது சுமார் ரூ.14,700/-க்கும் மற்றும் இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாறுபாடானது சுமார் ரூ.16,600/-க்கும் விற்பனையை செய்யப்படலாம்.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

வருகிற ஜனவரி 10-ஆ ம் தேதி தொடங்கி சீனாவில் விற்கப்படவுள்ள இந்த சாதனத்தின் அம்சங்களை பொறுத்தமட்டில், 1920 x 1080 பிக்சல்கள்ஏ என்கிற தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்ட அதே 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இந்த நோக்கியா கருவியும் 16: 9 என்கிற விகிதத்தை தான் கொண்டுள்ளது, 18: 9 அல்ல என்பது ஒரு சோகமான விடயம்.

ரியர் பக்கத்தில் கைரேகை ஸ்கேனர்

ரியர் பக்கத்தில் கைரேகை ஸ்கேனர்

ஆனால் அசல் நோக்கியா 6 உடன் ஒப்பிடுகையில் எச்எம்டி க்ளோபல் நிறுவனம் இதன் மேல் மற்றும் கீழ் பெசல்களை சற்று சுருக்கியுள்ளது. மேலும், இதன் கைரேகை ஸ்கேனர் ரியர் பக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. உடன் வன்பொருள் நேவிகேஷன் பொத்தான்களை களைந்து, ஆன்- ஸ்க்ரீன் பொத்தான்களை இணைத்துள்ளது.

32ஜிபி / 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு

32ஜிபி / 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு

இந்த ஸ்மார்ட்போன் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது, இது 14என்எம் உற்பத்தி செயல்பாட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த சிப்செட், கிராபிக்ஸ்களுக்கான அட்ரெனோ 508ஜிபியூ மற்றும், சிஸ்டம் செயல்பாடுகளுக்கான 4ஜிபி எல்பிடிடிஆர்4 ரேம், மற்றும் 32ஜிபி / 64ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் இணைந்து செயல்படுகிறது.

இயக்கமுறைமை

இயக்கமுறைமை

128 ஜிபி வரை விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் கொண்டுள்ள நோக்கியா 6 (2018) ஆனது துரதிர்ஷ்டவசமாக ஆண்ட்ராய்டு 7.1.1 இயக்கமுறைமையை பெட்டிக்கு வெளியே கொண்டுள்ளது. ஆனால் விரைவில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ புதுப்பிப்பை இக்கருவி பெறுமெனவும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

தடிமனாகவும், சற்று கனமானதாகவும் உள்ளது

தடிமனாகவும், சற்று கனமானதாகவும் உள்ளது

கேமராத்துறையை பொறுத்தமட்டில், அதே 8எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் 16எம்பி பின்புற கேமராவை கொண்டுள்ளது. மற்றொரு சோகமான பகுதி என்னவென்றால் நோக்கியா 6 (2018) ஆனது 8.6 மிமீ அளவில் அசல் நோக்கியா 6 ஸ்மார்ட்போனை விட தடிமனாகவும், சற்று கனமானதாகவும் உள்ளது.

மற்றொரு பெரிய மேம்படுத்தல்

மற்றொரு பெரிய மேம்படுத்தல்

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்ற அனைத்து இணைப்பு விருப்பங்களும் உள்ளன. மற்றொரு பெரிய மேம்படுத்தலாக இக்கருவியில் யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு இணைக்கப்பட்டுள்ளது.

அதே 3000எம்ஏஎச் பேட்டரி

அதே 3000எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 6 (2018) இன்னும் அதே 3000எம்ஏஎச் பேட்டரியை தான் கொண்டிருக்கிறது, ஆனால் நிறுவனத்தின் கூற்றுப்படி 30 நிமிடங்களில் 0 முதல் 50% வரை சார்ஜ் ஆகுமென்று வாக்குறுதி அளிக்கபட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, நோக்கியா 6 (2018) ஆனது அதன் அசல் நோக்கியா 6 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது நல்ல்லதொரு மேம்படுத்தல் ஆகும்.

Best Mobiles in India

English summary
Nokia 6 2018 With Snapdragon 630 SoC Officially Announced. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X