ரூ.2000 கேஷ்பேக் சலுகையுடன் விற்பனைக்கு வரும் நோக்கியா 6(2018).!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தஎச்எம்டி குளோபல் நிறுவனம் சர்வதேச மக்கது
எச்எம்டி குளோபல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் நோக்கியா 6(2018) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தற்சமயம் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நோக்கியா 6 அறிமுக சலுகையாக ஏர்டெல் நிநுவனம் ரூ.2000 கேஷ்பேக் அறிவித்துள்ளது, அதன்பின்பு ஐசிஐசிஐ வங்கி சார்பில் மே 31, 2018 வரை 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிளாக், வைட், புளு போன்ற நிறங்களில் இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications