டூயல் கேம் + போத்தீ அம்சத்துடன் நோக்கியா 6 (2018).!

|

ஸ்மார்ட்போன்களின் தரச்சான்றிதழ் வலைத்தளமான டிஇஎன்ஏஏ (TENAA) -வில் டிஎன்ஏ-1054 என்கிற மாடல் எண் கொண்ட ஒரு புதிய சாதனம் காணப்பட்டுள்ளது. இக்கருவி நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் 2018-ஆம் ஆண்டு பதிப்பாக இருக்கக்கூடும். முதலில் இக்கருவி நோக்கியா 9 ஆக இருக்கலாமென கூறப்பட்டது.

ஆனால், இந்த புதிய அறிக்கையானது நிச்சயமாக இது நோக்கியா 9 அல்ல, நோக்கியா 6 (2018) தான் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. உடன் சில கூடுதல் வழங்கியுள்ளது.

காணப்பட்டுள்ள தரச்சான்றிதழில் எந்தவிதமான வன்பொருள் அம்சங்களும் குறிப்பிடப்படவில்லை மற்றும் சாதனத்தின் லீக்ஸ் புகைப்படங்களும் சிக்கவில்லை. ஆனால் அசல் நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் ஒரு இரட்டை-சிம் பதிப்பாக இது களமிறங்கும் என்பது மட்டும் உறுதி.

வடிவமைப்பு மொழி

வடிவமைப்பு மொழி

கூறப்படும் நோக்கியா 6 (2018) கருவியானது நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மொழியுடன் மிகவும் ஒற்றுப்போகுமொரு டிசைனை கொண்டிருக்கும். இதன் அர்த்தம் டச் நேவிகேஷன் பொத்தான்கள் நீக்கப்பட்டு, ஆன்-ஸ்க்ரீன் பொத்தான்கள் இடம்பெறும் என்பதாகும்.

போத்தீ கேமரா அம்சம்

போத்தீ கேமரா அம்சம்

முன்னதாக வெளியான தகவலின்படி, நோக்கியா 6 (2018) ஆனது, 5.5 அங்குல 18:9 திரை விகிதம் கொண்ட டிஸ்பிளே கொண்டுவரும். ஒரு இரட்டை இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டு வரும் இக்கருவியில் நோக்கியா 8-ல் அறிமுகப்படுத்தப்பட்ட போத்தீ கேமரா அம்சமும் இடம்பெற வாய்ப்புள்ளது.

முதல் முயற்சி

முதல் முயற்சி

ஆரம்பத்தில், நோக்கியா 6 ஆனது சீன சந்தையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எம்டபுள்யூசி 2017 நிகழ்விற்கு பின்னர் நோக்கியா 6 உலகளாவிய சந்தைகளை எட்டியது; எதிர்பார்த்த வெற்றியையும் அடைந்தது. நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் - பெரிய அளவில் தேடப்படும் ஒரு சாதனமாக இருப்பினும் நிறுவனத்தின் முதல் முயற்சி என்பதால், அது ஒரு சாதாரண வன்பொருள் கொண்டே தொடங்கப்பட்டது.

உகந்ததாக இல்லை

உகந்ததாக இல்லை

குறிப்பாக அதன் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி செயலியானது நோக்கியா 6 ஸ்மார்ட்போனிற்கு உகந்ததாக இல்லை என்றே கூறலாம். இதனை மனதிற்கொண்ட எச்எம்டி குளோபல் நிறுவனம் வருகிற 2018-ஆம் ஆண்டில் நோக்கியா 6-ன் இரண்டாம் தலைமுறை மாறுபாட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது.

நோக்கியா 6 (2018) என்கிற பெயரில்

நோக்கியா 6 (2018) என்கிற பெயரில்

கூறப்படும் அடுத்த நோக்கியா 6 ஆனது நோக்கியா 6 (2018) என்கிற பெயரில், நோக்கியா 9 ஸ்மார்ட்போனுடன் இணைந்து ஜனவரி 2018-ல் அறிமுகப்படுத்தும் என்று முந்தைய அறிக்கைகள் தெரிவிக்கிறது. வெளியான தகவலானது, வருகிற ஜனவரி 19 ஆம் தேதியன்று சீனாவில் நடைபெறும் நிகழ்வொன்றில் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 (2018) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் என்கிறது.

சிறப்பான பகுதி

சிறப்பான பகுதி

அந்த நிகழ்வின் சிறப்பான பகுதி என்னவென்றால் அக்கருவிகள் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்டில் இருந்து ஒரே தாவலாக ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி செயலிக்கு மாறுகிறது. இந்தவொரு பிரதான மாற்றமே, நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் விற்பனையை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

இரட்டை சிம் ஆதரவு

இரட்டை சிம் ஆதரவு

ஒரு அறியப்படாத நோக்கியா மாதிரியானது ஆன்லைனில் காணப்பட்டு, அது நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் தான் என்று கூறும் இந்த அறிக்கை உண்மை என நம்பினால், நோக்கியா 6 (2018) ஆனது இரட்டை சிம் ஆதரவு, 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சேமிப்பு ஆகிய அம்சங்களை கொண்டுவரும்.

முழு எச்டி+ டிஸ்ப்ளே

முழு எச்டி+ டிஸ்ப்ளே

மேலும் கூறப்படும் நோக்கியா 6 (2018) கருவியில் முழு எச்டி+ டிஸ்ப்ளே இடம்பெறக்கூடும், இருப்பினும் அது வடிவமைப்பை முற்றிலுமாக மாற்றாது. ஏனெனில் நோக்கியா 6 - ஒரு இடைப்பட்ட தொகுப்பில் சிறந்த வடிவமைப்பை கொண்டிருக்கிறது.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

மேலும், இக்கருவியின் முழு எச்டி+ டிஸ்பிளே காரணமாக, இதன் கைரேகை சென்சார் தொலைபேசியின் பின்னால் நகர்த்தப்படலாம். இவை அனைத்தும் எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், அதன் பின்னரே இவைகள் அதிகாரப்பூர்வமான தகவல்களாகும்.

விலைப்புள்ளி

விலைப்புள்ளி

நோக்கியா 6 (2018) ஆனது ஜனவரி 19 அன்று தொடங்கலாம், ஆனால் அதன் உலகளாவிய மாறுபாடானது, எம்டபுள்யூசி 2018-ல் தான் வெளிவரும். அதாவது, 2018-ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் தான் இந்திய வெளியீடு நடக்கலாம். நோக்கியா 8-ன் விலையே இன்னும் தெரியவில்லை என்றாலும் கூட, நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் 64ஜிபி மாறுபாடானது 3,699 யுவான்கள் மற்றும் அதன் 128ஜிபி மாறுபாடானது 4,199 யுவான்கள் என்கிற விலைப்புள்ளியை எட்டலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 6 (2018) passes TENAA certification, could have dual-SIM support and 18:9 display. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X