நோக்கியா 6 (2018)-ன் இந்திய வருகை உறுதியானது; எப்போது.?
நோக்கியா 6 (2018) ஆனது ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் வகைகளில் வாங்க கிடைக்கும்.
நோக்கியாவின் நுழைவு நிலை ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 1 (கோ எடிஷன்)-ன் இந்திய அறிமுகத்தை தொடர்ந்து, புது தில்லியில், வருகிற ஏப்ரல் 4-ஆம் நடக்கவுள்ள நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை, எச்எம்டி க்ளோபல் நிறுவனம் அனுப்பியுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வில், மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018-ல் வெளியான நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது வரையிலாக என்னென்ன ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகும் என்பது சார்ந்த உறுதியான விவரங்கள் இல்லை. எனினும், நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நோக்கியா 6 (2018) ஆனது, நோக்கியா 8 சிராக்கோ, நோக்கியா 7 பிளஸ், மற்றும் நோக்கியா 8110 4ஜி (பனானா போன்) ஆகிய மொபைல்களுடன் வெளியானது குறிப்பிடத்தக்கது. அம்சங்களை பொறுத்தவரை, நோக்கியா 6 (2018) ஆனது ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் வகைகளில் வாங்க கிடைக்கும். ஆனால் இந்திய சந்தையில் பெரும்பாலும் இரட்டை சிம் விருப்பத்துடனே வெளிவரும். ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு இயங்குகிறது மற்றும் ஆண்ராய்டு ஒன் திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. ஆக கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தபடியாக ஆண்ட்ராய்டு பி அப்டேட்டை பெறும் ஸ்மார்ட்போனாக நோக்கியா 6 (2018) திகழும்.
ஒரு 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள நோக்கியா 6 (2018) ஆனது ஒரு ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 எஸ்சி மற்றும் 3 ஜிபி அல்லது 4 ஜிபி ரேம் உடன் இணைந்து இயக்கப்படுகிறது. செய்ஸ் ஒளியியல் மற்றும் பிடிஏஎப், ஒரு எப்/ 2.0 துளை மற்றும் டூயல் டோன் எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு எப் / 2.0 துளை உடனான ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.


நோக்கியா 6 (2018) ஆனது 32 ஜிபி அல்லது 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் கொண்டுள்ளது. மேலும் 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி வடைப்-சி மற்றும் ஒரு 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications