ரெட்மீ பாவம், ஒப்போ ரொம்ப பாவம்: அடித்து நொறுக்கும் நோக்கியா 6 (2018).!

|

எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுவிட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள், இனி அதன் சந்தை ஆக்கிரமிப்பு யுத்திகளை கட்டவிழ்த்து விடவுள்ளது. அந்த நடவடிக்கையின் முதலடியாக - நோக்கியா 6 (2018) மாறுபாடு திகழும்.

நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 6 (2018) பதிப்பானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியிடப்படவுள்ளது.

இக்கருவியின் அதிகாரப்பூர்வ அம்சங்கள் மற்றும் குறிப்புகள் இதுவரை தெளிவாக இல்லை என்றாலும் கூட, கூறப்படும் நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது நிச்சயமாக மற்ற மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை ஒருவழி செய்துவிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதெப்படி.? ஏன்.? எதனால்.?

எதனுடனும் பொருந்தாத வடிவமைப்பு

எதனுடனும் பொருந்தாத வடிவமைப்பு

முன்னர் வெளியான சாதனத்தின் அடிச்சுவட்டில் (வடிவமைப்பு மொழியில்) தான் நோக்கியா 6 (2018) மாறுபாடு ஒரு தெளிவான மற்றும் புதுமையான தோற்றத்துடன் வெளியாகும். அதாவது மென்மையான உலோக வெளிப்புறத்துடன் பல வண்ண மாதிரிகளில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மிட்-ரேன்ஜ் கருவி

மிட்-ரேன்ஜ் கருவி

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனின் உலோக சேஸ் சட்டகமானது அதன் கடினத்தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் திறனை உறுதிசெய்யும். இந்தவகையிலான வடிவமைப்பானது பெரும்பாலான மிட்-ரேன்ஜ் கருவிகளில் கிடையாது. ஆக நோக்கியா 6 (2018) ஆனது ஒரு பட்ஜெட் சாதனம் என்பதே ஒருமிகப்பெரிய ஆச்சரியம் தான்.

முழு எச்டி+ 5.5 அங்குல திரை

முழு எச்டி+ 5.5 அங்குல திரை

இதுவரை வெளியான கசிவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், இந்த நோக்கியா சாதனம் ஒரு உயரமான 18: 9 என்கிற திரை அளவிலான முழு எச்டி+ 5.5 அங்குல திரை அளவைக் கொண்டிருக்கும் என்பது போல தெரிகிறது.

சிறிய மற்றும் மெல்லிய வடிவமைப்பு

சிறிய மற்றும் மெல்லிய வடிவமைப்பு

இதே டிஸ்பிளே அளவை தான் நோக்கியா 6 ஸ்மார்ட்போனும் கொண்டுள்ளது. ஆக நோக்கியா 6 (2018) ஆனது அதன் முன்னோடி விட சிறிய மற்றும் மெல்லிய வடிவமைப்பு கொண்டு வர அதிக வாய்ப்புள்ளது. இது ஸ்மார்ட்போனின் இறுக்கமான பிடிமானம் மற்றும் எளிமையாக கையாளுவதை உறுதி செய்யும்.

பின்வரிசையில் நிற்காது.

பின்வரிசையில் நிற்காது.

சியோமி. ஒப்போ மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் அதன் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் இரட்டை பின்புற கேமராக்களை பொருத்துவதால் இனியும் நோக்கியா பின்வரிசையில் நிற்காது.

கார்ல் ஜெயஸ் ஆப்டிக்ஸ்

கார்ல் ஜெயஸ் ஆப்டிக்ஸ்

நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனின் இரட்டை பின்புற சென்சர்களின் அம்சங்களை பொறுத்தமட்டில், நிறுவனத்தின் வழக்கமான கார்ல் ஜெயஸ் ஆப்டிக்ஸ் இடம்பெறலாம். அதாவது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ முறையின் கீழ் இரட்டை கேமரா அமைக்கப்படலாம்.

4000எம்ஏஎச் முதல் 5000எம்ஏஎச்

4000எம்ஏஎச் முதல் 5000எம்ஏஎச்

பேட்டரி ஆயுளை பற்றிய விளக்கமே தேவையில்லை. நோக்கியா 6 ஆனது ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளதால், அதன் அடுத்தக்கட்ட மாறுபாடானது 4000எம்ஏஎச் முதல் 5000எம்ஏஎச் வரையிலான திறனில் ஒரு பெரிய பேட்டரி ஆதரிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

வோல்ட் நெட்வொர்க்

வோல்ட் நெட்வொர்க்

பெரிய பேட்டரி என்றால் அதிக ஸ்டான்ட் பை நேரம் கிடைக்கும். அதுவும் வோல்ட் நெட்வொர்க்குகளில் இயங்கும் ஒரு சாதனத்திற்கான அதிக ஸ்டாண்ட்-பை நேரம் என்பது பயனர்களுக்கு ஒரு பெரிய சிறப்பம்சமாக இருக்கும்.

டிஇஎன்ஏஏ சான்றிதழ்

டிஇஎன்ஏஏ சான்றிதழ்

சமீபத்தில், நோக்கியா 6 (2018)ஆனது டிஇஎன்ஏஏ சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது, இந்த சான்றிதழ் சீன சந்தையில் ஒரு சாதனத்தை விற்க அனுமதிக்கும். பட்டியலில் காணப்பட்ட அம்சங்களை பொறுத்தமட்டில் நோக்கியா 6 (2018) ஆனது ஒரு மிக பெரிய மாற்றத்தை கொண்டுவரும்.

ஸ்னாப்டிராகன் 660 செயலி

ஸ்னாப்டிராகன் 660 செயலி

அதாவது ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்டிற்கு பதிலாக ஒரு புதிய ஸ்னாப்டிராகன் 660 செயலி உடனான 4ஜிப ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயங்கலாம். உடன் மைக்ரோ எஸ்டி அட்டை விரிவாக்கத்தை ஆதரிக்கும் மற்றும் ஹைப்ரிட் இரட்டை சிம் கார்டு ஆதரவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 6 (2018): How Will It Make the Current Mid-Range Smartphones Feel Bad? Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X