ஸ்னாப்டிராகன் 660 செயலியுடன் வெளிவரும் நோக்கியா 6 (2018).!
இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
எச்டிஎம்டி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி புதிய நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் மாடல் வரும் 2018-ம் துவகத்தில் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனின் மாடல் எண் டிஏ-1054-என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

5.5-இன்ச் டிஸ்பிளே:
புதிய நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1920×1080 )
பிக்சல் தீர்மானம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 660:
இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய
செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications