இந்தியா: விரைவில்: நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 2720 ஃபிளிப், நோக்கியா 1100 மற்றும் நோக்கியா 800 Tough சாதனங்களை அன்மையில் நடைபெற்ற IFA 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அனைத்தும் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் இந்த வாரம் இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும்.

நோக்கியா 7.2
நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுளள்து இந்த ஸ்மார்ட்போன் மாடல் குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 7.2 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவதுள்ளது. குறிப்பாக 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 6.2
நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 2280 x 1080 பிக்சல் திர்மானம் இடம்பெற்றுள்ளது. பின்பு கார்னிங்க கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, எச்டிஆர் ஆதரவு, 4ஜபி ரேம், 64ஜிபி மெமரி, உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம், 3500எம்ஏஎச் பேட்டரி, உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications