சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்த நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்!
கடந்த மாதம் பேரலினில் நடந்த ஐ.எஃப்.ஏ தொழில்நுட்ப கண்காட்சியை ஒட்டி, எச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா 6.2 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

புதிய நோக்கிய 6.2 ஸ்மார்ட்போன், வாட்டர் டிராப் நாட்ச் உடன், முழு எச்டி + டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 3,500 எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமேசான் வழியாக இந்தியாவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெறும் ரூ.15,999 என்ற விலையில் களமிறங்கியுள்ளது. நோக்கியா தளத்திலும் இந்த புதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் மாடல் ரூ.15,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த புதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் ஐஸ் ப்ளூ நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்.டி.எப்.சி வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு உடனடி கேஷ் பேக் சலுகையாக ரூ.2000 வழங்கப்படுகிறது. அதேபோல் எக்ஸ்சேஞ் சலுகையை ரூ.10,100 வழங்கப்படுகிறது.

புதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்
6.3' இன்ச் முழு எச்டி பிளஸ் கொண்ட எச்.டி.ஆர் 10 டிஸ்ப்ளே
கொரில்லா கிளாஸ் 3
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
ஆண்ட்ராய்டு 9 பை
4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட்
512 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி ஸ்லாட்
16 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
5 மெகா பிக்சல் டெப்த் ஷூட்டர் கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
டூயல் சிம்
வைஃபை 802.11ac
ப்ளூடூத் 5.0
யூஎஸ்பி டைப்-சி போர்ட்
3,500 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications








