Home
Mobile

சியோமிக்கு பதிலடி: நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச விலைகுறைப்பு.!

சியோமி நிறுவனம் இன்று மூன்று தரமான சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்தது, உடனே போட்டிக்கு நோக்கியா நிறுவனமும் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது.

நோக்கியா 6.2

நோக்கியா 6.2

அதன்படி நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ரூ.15,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம்அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இதேநோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் தற்போது ரூ.13,890-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 7.2

நோக்கியா 7.2

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் முறையே நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.18,599 மற்றும் ரூ.19,599-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் 4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்16,599-விலையிலும், 6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் 17,499-விலையிலும் அமேசான் தளத்தில்விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் கொண்ட் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்
ரூ.15,699-விலையிலும், 6ஜிபி ரேம் கொண்ட் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் 16,695-விலையிலும் விற்பனைசெய்யப்படுகிறது.

நோக்கியா 7.2

நோக்கியா 7.2

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுளள்து இந்த ஸ்மார்ட்போன் மாடல் குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 7.2  கேமரா

நோக்கியா 7.2 கேமரா

நோக்கியா 7.2 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவதுள்ளது. குறிப்பாக 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 6.2

நோக்கியா 6.2

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 2280 x 1080 பிக்சல் திர்மானம் இடம்பெற்றுள்ளது. பின்பு கார்னிங்க கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, எச்டிஆர் ஆதரவு, 4ஜபி ரேம், 64ஜிபி மெமரி, உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 6.2 கேமரா

நோக்கியா 6.2 கேமரா

மேலும் இந்த நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம், 3500எம்ஏஎச் பேட்டரி, உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 6.2 and Nokia 7.2 price slashed in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X