நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
அன்மையில் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பை அறிவித்ததை தொடர்ந்து நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைப்பை அறிவித்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

விலைகுறைப்பு:
4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.2500-விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 6.1 பிளஸ் டிஸ்பிளே:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது ,மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6.1 பிளஸ் கேமரா:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது.

3060எம்ஏஎச் பேட்டரி
பின்பு வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications