மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.!
நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்கனவே விலைகுறைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் விலைகுறைப்பை அறிவித்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள்
பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.12,680-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.17,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்ட ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 6.1 பிளஸ் டிஸ்பிளே:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது ,மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6.1 பிளஸ் கேமரா:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது. பின்பு வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
இந்த ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது

நோக்கியா 5.1 பிளஸ் டிஸ்பிளே:
இக்கருவி 5.86-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற
திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது.

நோக்கியா 5.1 பிளஸ் சிப்செட்
நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்
மாடல்.

நோக்கியா 5.1 பிளஸ் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும். நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, வைஃபை,ப்ளூடூத் வி4.2, 3.5எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications