ஜூலை 21ல் பட்ஜெட் விலையில் களமிறங்கும் நோக்கியா 6.1 பிளஸ்.!
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட் போன் ரூ.20 ஆயிரத்து 100. இந்த வகை போன்கள் வெள்ளை, நீல நிறத்தில் கிடைக்கும்.
நோக்கியா போன்கள் தற்போது விற்பனையை அதிகரித்து மீண்டும் சந்தையில் தன்னை நிலை நாட்டும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக போன்களை விதவிதமாக வெளியிட்டு வருகிறது நோக்கியா நிறுவனம்.
நவீன நோக்கியா போன்களின் புது வருகையை நோக்கி வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்து நிற்கின்றனர். இந்த போன்கள் வர்த்த ரீதியாக வெற்றி அடையும் என்பதில் சந்தேகமில்லை.

நோக்கியா 6.1 பிளஸ்:
நோக்கியா 6.1 பிளஸ் ஆன்ட்ராய்டு ஒன் போனும், நோக்கியா எக்ஸ் 6 போனும் ஒரே மாதிரியான தோற்றத்தில் காட்சியளிக்கின்றன. தற்போது நோக்கிய 6.1 பிளஸ் ஆன்ட்ராய்டு ஒன் என்ற பெயரில் வெளிவர இருக்கின்றது.

நோக்கியா 6.1 பிளஸ் விலை:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட் போன் ரூ.20 ஆயிரத்து 100. இந்த வகை போன்கள் வெள்ளை, நீல நிறத்தில் கிடைக்கும். வரும் ஜூலை 24ம் தேதி ஹாங்ஹாங்கில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. அதே தேதியிலும் இந்தியாவிலும் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

சிறப்பு அம்சங்கள்:
நோக்கிய 6.1 பிளஸ் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்ளட்டக்க மெரியை கொண்டுள்ளது. மேலும் 400 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்த முடியும். இந்த போனின் பின் புறத்தில் இரட்டை கேமராவும், 16 மெகா பிக்சல் சென்சாரையும் கொண்டுள்ளது. மேலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் உள்ளது.

சீனாவில் நோக்கிய எக்ஸ் 6 அறிமுகம்:
கடந்த மேமாதம் சீனாவில் நோக்கிய எக்ஸ் 6 என்ற பெயரியல் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. 6.1 பிளஸ் ஆன்ட்ராய்டு ஒன் இரண்டும் ஓரே புரோகிரைமை அடிப்படையாக கொண்டுள்ளது.

கொரிலா கண்ணாடி:
நோக்கிய 6.1 பிளஸ் ஆன்ராய்டு ஒன்னும் நோக்கிய எக்ஸ் 6ம் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. 5.8 இன்ச் எச்டி (1080x2280 பிக்சல் அளவும், டிஸ்பிளே பாதுகாப்பு 2.5டி கொரில்லா கண்ணாடியை வழங்குகிறது. 3060 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களையும் இந்த வகை போன் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications