நோக்கியா ஸ்மார்ட் போன்கள் அதிரடியாக விலை குறைப்பு.!
நோக்கியாவின் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பதாக அறிவித்துள்ளது.
நோக்கியாவின் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பதாக அறிவித்துள்ளது.

புதிய வடிவில் சக்கை போடு போட்டு வரும் நோக்கியா நிறுவனம் விலை குறைத்துள்ளதால், வாடிக்கையாளர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நோக்கியா :
நோக்கியாவின் மாடல்களை ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏரளமான மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது. நவீன காலத்திற்கு ஏற்ப தனது ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பையும் மாற்றி அறிமுகம் செய்து வருகின்றது. சந்தையில் ஏற்படும் போட்டியை சமாளிக்கவும் விலைகுறைப்பு போன்ற நடவடிக்கையில் செல்போன் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

விலை குறைப்பு:
இந்தியாவில் நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக ஹெச்.எம்.டி. குளோபல் அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் படி நோக்கியா 3.1 விலை தற்சமயம் ரூ.8,999 ஆகவும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999 என மாறியுள்ளது.

5.1 பிளஸ் 6.1 பிளஸ் விலை குறைப்பு:
முன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் தனது நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்தது. இந்தியாவில் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ரூ.11,999 விலையில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கிறது.

நோக்கியா 3.1 :
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் 5.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1440 பிக்சல் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 சிப்செட், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 2900 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்:
நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,500 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6.1 விலை குறைப்பு:
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகமான நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.16,999 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1,500 விலை குறைக்கப்பட்டது.

5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி
நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1080x1920 பிக்சல் ஐ.பி.எஸ். எல்.சி.டி. பேனல், ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.


Click it and Unblock the Notifications