நோக்கியாவின் தரமான நோக்கியா 5310.! எப்போது அறிமுகம்? என்ன விலை?
எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, அதன்படி இந்நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் தனது புதிய நோக்கியா 5310 பீச்சர் போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இதை உறுதிப்படுத்த சமீபத்தில் எச்எம்டி குளோபல் நிறுவனம் டிஸ் செய்யத் தொடங்கி உள்ளது.

இந்த ஆண்டு துவகத்தில் லண்டனில் ஒரு ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 1.3 ஆண்ட்ராய்டு கோ எடிஷன்
ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 5310 மொபைலின் இந்திய விலை நிர்ணயம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை
விரிவாகப் பார்ப்போம்.
நோக்கியா மொபைல் இந்தியா தனது டிவிட்டர் அக்கவுண்ட் வழியாக இந்த லேட்டஸ்ட் பீச்சர் போன் மாடலை அறிமுகம்செய்வதாக தகவல் தெரிவித்துள்ளது. அந்த ட்வீட்டில் "ரீமிக்ஸிற்கான கவுண்டன் தொடங்கியது. நீங்கள் #NeverMissABeat க்கு தயாரா? # Nokia5310." என்று பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 5310எக்ஸ்பிரஸ் மியூசிக்கைவெளியிட்ட நேரத்தில்,அது கருப்பு, சிவப்பு மற்றும் கருப்பு, நீல வண்ண விருப்பங்களில், டிஸ்பிளேவின் இடது பக்கத்திற்கு அருகில் மூன்று பொத்தான்களுடன் வந்தது. ஆனால் புதிய நோக்கியா 5310 ஆனது வெள்ளை, கருப்பு,சிவப்பு, வண்ண விருப்பங்களில் வெளிவரும் என்றும், ஆனால் டிஸ்பிளேவிற்கு அருகில் எந்தபாடி பட்டன்களையும் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் 2.4-இன்ச் QVGA டிஸ்ப்ளே (320x240 பிக்சல் ) வசதியுடன் இந்த நோக்கியா 5310 போன் வெளிவரும்,பின்பு 2ஜி வசதி கொண்ட இந்த சாதனம் டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் பாடி கீபேட் உடன் வருகிறது. மேலும் இந்த சாதனம் டூயல் சிம்,மினி சிம்மை ஆதரிக்கும் ஒற்றை சிம் விருப்பங்களில் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

நோக்கியா 5310 பீச்சர் போன் ஆனது மீடியாடெக் MT6260A SoC மூலம் இயக்கப்படுகிறது. பின்பு 8எம்பி ரேம் மற்றும் 13எம்பிமெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். பின்பு கூடுதலாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நோக்கியா 5310 மாடலின் பின்புறத்தில் ஃபிளாஷ் கொண்ட விஜிஏ கேமரா வசதி உள்ளது, மேலும் எம்பி 3 பிளேயர் மற்றும் எஃப்எம் ரேடியோ போன்ற அம்சங்களும்இதில் உண்டு. அளவீட்டில் 123.7 x 52.4 x 13.1 மிமீ மற்றும் 88.2 கிராம் எடை கொண்டுள்ளது நோக்கியா 5310 மாடல்.

இந்த நோக்கியா 5310 சாதனம் ஆனது 1200எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது, இது ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் வேரியண்ட்களில் 7.5 மணி நேரம் வரை பேச்சு நேரத்தை உறுதிப்படுத்துகிறது. பின்பு இரட்டை சிம் வேரியண்ட்டில் 22நாட்கள் என்கிற காத்திருப்பு நேரத்தையும், ஒற்றை சிம் வேரியண்ட்டில் 30நாட்கள் என்கிற காத்திருப்பு நேரத்தையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications