நோக்கியா 500, ஆஷா-303 ஸ்மார்ட்போன்கள்: ஓர் ஒப்பீட்டு அலசல்

By Super
|

நோக்கியா 500, ஆஷா-303 ஸ்மார்ட்போன்கள்: ஓர் ஒப்பீட்டு அலசல்
நோக்கியாவின் மொபைல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றள்ளது. அதற்கு முக்கிய காரணம் இதன் உயர்ந்த தொழில் நுட்பம் தான். இந்த வரிசையில் சர்வதேச சந்தையில் வெளிடப்பட்டுள்ள நோக்கியா-500 மற்றும் ஆஷா-303 மொபைல்கள் பற்றிய சிறப்பம்சங்களின் ஒப்பீட்டு அம்சங்களை இங்கே காணலாம்.

நோக்கியா-500 மொபைல் 93 கிராம் எடையையும், ஆஷா-303 மொபைல் 99 கிராம் எடையையும் கொண்டுள்ளது. நோக்கியா-500 மொபைல் 3.2 இஞ்ச் திரை வசதி மூலம் 640 X 360 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும்.

ஆனால், ஆஷா-303 திரை வசதியில் நோக்கியா-500 மொபைலையும் விட சற்று சிறிய திரையை கொண்டுள்ளது. திரையின் அளவு சிறியதாக இருந்தாலும், முழுமையான தகவல்களை காட்ட அதிக துல்லியத்தை கொடுத்து ஒத்துழைக்கின்றது.

ஆஷா-303 மொபைல் 2.6 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்டது. நோக்கியா சிம்பையான் அன்னா இயங்குதளத்தின் மூலம் இயங்கும் தன்மை கொண்டது. ஆஷா-303 மொபைல் எஸ்-40 டச் மற்றும் டைப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

நோக்கியா-500 மொபைலில் 5 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா டிஜிட்டல் 4X சூம் தொழில் நுட்ப வசதியை கொடுக்கும். இதனால் எந்த புகைப்படத்தையும் தெளிவாக பார்க்க முடியும். ஆஷா-303 மொபைல் 3.2 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும். 2 மொபைல்களும் ஆடியோ மற்றும் வீடியோ வசதியினையும் கொடுக்கிறது.

நோக்கியா-500 மொபைல் 1,110 எம்ஏஎச் லித்தியம் பேட்டரியினை வழங்கும். இதனால் 7 மணி நேரம் டாக் டைம் மற்றும் 500 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெறலாம். ஆஷா-303 ஸ்மார்ட் மொபைல் பிபி-3எல் பேட்டரியை கொண்டுள்ளதால் 8 மணி நேரம் 10 நிமிடங்களை டாக் டைமாக வழங்குகிறது. பேட்டரியில் நோக்கியா-500 மொபைலை விடவும், ஆஷா-303 மொபைல் கூடுதல் டாக் டைமை கொடுக்கிறது.

நோக்கியா-500 ஸ்மார்ட்போன் 2ஜிபி வரை இன்டர்னல் மெமரியையும், ஆஷா-303 ஸ்மார்ட்போன் 100எம்பி வரை இலவச ஸ்டோரேஜ் மெமரியையும் வழங்கும். ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களின் மெமரி கார்டு ஸ்லாட் மூலம் மெமரியை 32ஜிபி வரை விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

ஆஷா-303, நோக்கியா-500ஸ்மார்ட் மொபைல்கள் புளூடூத் மற்றும் வைபை வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. நோக்கியா-500 மொபைல் ரூ.11,000 விலையிலும், நோக்கியா ஆஷா-303 மொபைல் ரூ.8,500 விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X